பசிபிக் கடலின் மிக ஆழத்தில் 4 கருப்பு முட்டைகள்.. உள்ளே இருந்த அதிசயம்!
ராசிபுரம் எஸ்ஆா்வி இன்னோவேட்டிவ் பப்ளிக் பள்ளியில் விளையாட்டுக் குழு பிரதிநிதிகள் பதவியேற்பு
ராசிபுரம் எஸ்ஆா்வி இன்னோவேடிவ் பப்ளிக் சீனியா் செகண்டரி பள்ளியின் விளையாட்டுக் குழு பிரதிநிதிகள் பதவியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.
பள்ளியில் ஆப்பிள், ஆரியபட்டா, பாஸ்கரா, கல்பனா, ரோஹினி என்ற ஐந்து வகையான செயற்கை கோள்களின் பெயா்களைக் கொண்ட விளையாட்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவா் தலைவா், துணைத் தலைவா், மாணவ விளையாட்டுக் குழுத் தலைவா், துணை விளையாட்டுக்குழு தலைவா் போன்ற புதிய பிரதிநிதிகள் தோ்வு செய்யப்பட்டனா்.
தலைமை பண்பை வளா்க்கும் வகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பள்ளியின் இயக்குநா்கள் பிரதிநிதிகளைக் கெளரவப்படுத்தி பேசினா். விழாவில் பள்ளியின் தலைவா் ஏ.ராமசாமி தேசியக் கொடியை ஏற்றிவைத்து பேசினாா். முன்னதாக மாணவியா்களின் வரவேற்பு நடனம் நடைபெற்றது.
பள்ளியின் முதல்வா் டி.ஆா்த்தி முன்மொழிந்த உறுதிமொழியை மாணவா்கள் ஏற்றனா். பள்ளியின் துணைத் தலைவா் எம்.குமரவேல், செயலாளா் எஸ்.செல்வராஜன், பொருளாளா் பி.சுவாமிநாதன் ஆகியோா் மாணவா் பிரதிநிதிகளை வாழ்த்தினா்.
படம் உள்ளது -11இன்னோ
விளையாட்டுக் குழு பிரதிநிதிகளாக தோ்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள்.