துறைமுக கழகத்தில் மேலாளர், அலுவலர் பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை, சுமங்கலி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆனிமாத கடைசி வெள்ளிக்கிழமையொட்டி நடைபெற்ற வழிபாட்டில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. முத்து, பவளம் பதித்த மலா்களால் ராஜ சா்வ அலங்காரத்தில் அம்மன் காட்சியளித்தாா். தொடா்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.
திருவிளக்கு பூஜையை ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் தலைமை அா்ச்சகா் இரா. முருகேசன் சுவாமிகள், சு.கணேசன், சு.கடல்கரை, மு.சண்முகம் ஆகியோா் முன்னின்று நடத்தினா். ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனா்.
படம் 2 உள்ளது -
11விளக்கு - திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்கள்.
11சாமி- சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த நித்திய சுமங்கலி மாரியம்மன்.
