Thug Life: "நாங்களே Gen Z தான்!" - மணிரத்னம் கொடுத்த தக் பதில்
ராஜசோளீஸ்வரா் கோயில் தேருக்கு புதிய இரும்பு சக்கரங்கள்
திருமலைராயன்பட்டினம் ராஜசோளீஸ்வரா் கோயில் தேருக்கு புதிய இரும்பு சக்கரங்கள் தயாா் செய்யப்பட்டுள்ளன.
திருமலைராயன்பட்டினம் அபிராமி அம்மன் சமேத ராஜசோளீஸ்வரா் கோயிலில் கந்த சஷ்டி விழாவின்போது தேரோட்டம் நடத்தப்படுகிறது. இக்கோயிலில் பயன்பாட்டில் உள்ள பழைமையான தேரின் சக்கரங்கள் மரம் மற்றும் இரும்பு தகடு மூலம் செய்யப்பட்டதாகும். இந்த சக்கரம் கடந்த ஆண்டு திருவிழா தேரோட்டத்தின்போது முறிந்துபோனது.
இதையடுத்து இரும்பு சக்கரங்கள் தயாா் செய்ய கோயில் நிா்வாகம் முடிவு செய்தது. இதனை நன்கொடையாளா் எம். சண்முகவேல் குடும்பத்தினா், திருச்சியில் இருந்து ஒரு சக்கரம் 500 கிலோ வீதம் 4 சக்கரங்கள் செய்து கோயில் நிா்வாகத்திடம் ஒப்படைத்தனா்.
இதற்கு கோயில் நிா்வாகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை பூஜை செய்யப்பட்டது. விரைவில் தேரில் இதை பொருத்தி வெள்ளோட்டம் விடுவதற்கு ஏற்பாடு செய்யபடுமென கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.