இந்தியா-சீனா ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்: அதிபர் ஷி ஜின்பிங்
ராஜஸ்தான்: ஆண் குழந்தை இல்லாததால் இரட்டைப் பெண் குழந்தைகளை கொன்று புதைத்த தந்தை
ராஜஸ்தானில் ஆண் குழந்தை இல்லாததால் இரட்டைப் பெண் குழந்தைகளை கொன்று புதைத்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம், சிகாரில் வசித்து வருபவர்கள் அசோக் யாதவ், அனிதா தம்பதி. இவர்களுக்கு ஏற்கெனவே 5 வயதில் மகள் உள்ளார். தொடர்ந்து, கடந்த நவம்பர் மாதம் இத்தம்பதிக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. ஆனால், அசோக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களும் ஆண் குழந்தையை விரும்பினர்.
இந்த விவகாரத்தில் கணவன், மனைவி இடையே அடிக்கடி சண்டை நடைபெற்று வந்திருக்கிறது. அதேபோல் கடந்த வியாழன் அன்றும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனைவியை தாக்கியதோடு இரண்டு மகள்களையும் தூக்கி தரையில் அசோக் வீசினார்.
உ.பி.யில் காகித ஆலையில் பாய்லர் வெடித்து 3 பேர் பலி
இந்த சம்பவத்தில் காயமடைந்த குழந்தைகள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இதன் பின்னர், கணவரும் அவரது குடும்பத்தினரும் குழந்தைகளை அடக்கம் செய்தனர். அடக்கம் செய்யப்பட்ட இடத்தை மூடுவதற்கு கற்களும் புதர்களும் வைக்கப்பட்டன.
இதுதொடர்பாக குழந்தைகளின் தாய் மாமா கோட்வாலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், அங்கு விரைந்த போலீஸழர் வெள்ளிக்கிழமை காலை, சடலங்களைத் தோண்டி எடுத்து, உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக குழந்தையின் தந்தையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.