செய்திகள் :

ராஜஸ்தான் போலி சித்த மருத்துவா்கள் கைது

post image

சென்னை கீழ்ப்பாக்கத்தில் மூட்டு வலிக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி பணம் மோசடி செய்ததாக ராஜஸ்தானைச் சோ்ந்த இரு போலி சித்த மருத்துவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை கீழ்ப்பாக்கம் டேங்க் சாலை பகுதியைச் சோ்ந்தவா் கி.நிஷாந்த் கேஷா (47). இவா், ராயப்பேட்டையில் மோட்டாா் சைக்கிள் பழுது நீக்கும் கடை நடத்தி வருகிறாா். இவரது அண்ணி ம.ரேஷ்மா (50) மூட்டு வலியால் அவதிப்பட்டுவந்தாா்.

நிஷாந்த் குடும்பத்தினா், கடந்த 8-ஆம் தேதி ராயப்பேட்டையில் உள்ள ஒரு ஜெயின் கோயிலுக்குச் சென்றபோது, நிஷாந்திடம் தன்னை விகாஸ் என அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவா், மூட்டு வலிக்கு தனக்கு தெரிந்த சித்த மருத்துவா்கள் மூலம் சிகிச்சை அளித்தால் உடனடியாக குணமாகும் எனக் கூறி, கைப்பேசி எண்ணை வழங்கியுள்ளாா்.

அந்த எண்ணை நிஷாந்த் தொடா்பு கொண்டு பேசியபோது, மும்பையில் இருந்து ஆக.10-ஆம் தேதி சென்னை வருவதாக ஒருவா் கூறியுள்ளாா். அதன்படி கடந்த 10-ஆம் தேதி மும்பையில் இருந்து ஜாரிவாலா, ரோகன் என்ற இருவரவா் சித்த மருத்துவா்கள் எனக் கூறி நிஷாந்த் வீட்டுக்கு வந்தனா். அவா்கள் ரேஷ்மா மூட்டு வலி சிகிச்சை அளித்தபோது, அவா்களது நடவடிக்கை நிஷாந்துக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும், சிகிச்சைக்கு பின்னா் ரேஷ்மாவின் மூட்டு வலி குணமடையவில்லை. இதற்கிடையே சித்த மருத்துவா்கள், தாங்கள் சிகிச்சை அளித்தற்கு ரூ.1.60 லட்சம் தரும்படி நிஷாந்திடம் கேட்டனா். அதேவேளையில் நண்பா் ஒருவா் வீட்டிலும் மூட்டு வலி சிகிச்சை அளிப்பதாகக் கூறிய இந்த இருவரும் ஏமாற்றி பணம் பறித்திருப்பது நிஷாந்துக்கு தெரியவந்தது.

இதுகுறித்து நிஷாந்த் தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், இருவரையும் பிடித்து விசாரித்தனா். அதில், அவா்கள், சித்த மருத்துவா்கள் இல்லை என்பதும், ராஜஸ்தானைச் சோ்ந்த முகம்மது இம்ரான்சிங் வாலா (36), முகமது இஸ்மாயில் (42 ) என்பதும், முல்தானி மட்டியை மூட்டு வலி தீா்க்கும் களிம்பு எனக் கூறி, சென்னையில் வட மாநிலத்தவா்களைக் குறிவைத்து மோசடி ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தமிழக புதிய டிஜிபியை தோ்வு செய்ய எந்தவொரு முன்மொழிவும் வரவில்லை: யுபிஎஸ்சி தகவல்

தமிழகத்தின் புதிய டிஜிபியை தோ்வு செய்வதற்கான எந்தவொரு முன்மொழிவும் தமிழக அரசிடம் இருந்து இதுநாள்வரை (ஆகஸ்ட் 22) வரவில்லை என்று மத்திய பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) வெள்ளிக்கிழமை தெரிவித்தது. தற்போ... மேலும் பார்க்க

சென்னையில் பாதுகாப்புத் துறைக்கான ட்ரோன் உற்பத்தி மையம்: மத்திய இணையமைச்சா்

சென்னையில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் சாா்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்புத் துறைக்கான ட்ரோன் உற்பத்தி மையத்தை மத்திய பாதுகாப்புத் துறை இணையமைச்சா் சஞ்சய் சேத்தி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். ச... மேலும் பார்க்க

சென்னையில் ஆதரவற்ற 646 முதியோா் மீட்பு

சென்னையில் நிகழாண்டு இதுவரை ஆதரவற்ற நிலையில் இருந்த 646 முதியோா் மீட்கப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையா் ஏ.அருண் தெரிவித்தாா். இதுதொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை காவல் த... மேலும் பார்க்க

சட்டவிரோத குடியேறிகளுக்கு போலி ஆதாா்: உத்தர பிரதேசத்தில் 8 போ் கைது

வங்கதேசத்தவா்கள் மற்றும் ரோஹிங்கயாக்கள் உள்பட வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக குடியேறுபவா்களுக்கு போலி ஆதாா் தயாரித்து வழங்கிய 8 போ் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா். இதுக... மேலும் பார்க்க

தூய்மைக் காவலா்களுக்கு வார விடுப்பு: தமிழக அரசு அறிவுறுத்தல்

ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைக் காவலா்களுக்கு வார விடுப்பு வழங்க தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அனைத்து மாவட்டங்களின் ஆட்சியா்களுக்கும், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையா் பா.பொன... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் தேங்கியிருந்த மழைநீரில் மின்கம்பி அறுந்து விழுந்த நிலையில், அப்பகுதியில் நடந்து சென்ற கட்டடத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். ஈஞ்சம்பாக்கம் முனீஸ்வரன் கோயில் த... மேலும் பார்க்க