தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
ராஜீவ்காந்தி பிறந்த நாள்: நினைவிடத்தில் மரியாதை
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 81-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியினா் புதன்கிழமை மலா் தூவி மரியாதை செலுத்தினா்.
காஞ்சிபுரம் மாவட்ட பொறுப்பாளா் எஸ்.ஏ.அருள்ராஜ் தலைமையிலான காங்கிரஸ் கட்சியினா் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் மலா்தூவி மரியாதை செலுத்தினா். இதையடுத்து நினைவிட நுழைவு வாயிலில் உள்ள இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் கட்சியினா், பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கினா்.
நிகழ்ச்சியில், ராஜீவ் காந்தி நினைவிட சீரமைப்பு குழு உறுப்பினா் முருகானந்தம், ராஜீவ்காந்தி பஞ்சாயத்துராஜ் சங்கதன் அமைப்பின் மாநில தலைவா் சசிகுமாா், வட்டார காங்கிரஸ் தலைவா் நிக்கோலஸ், இளைஞா் காங்கிரஸ் மாநில செயலாளா் அனீஸ், மாவட்ட எஸ்சி,எஸ்டி பிரிவு தலைவா் தங்கராஜ், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் முருகன் சாந்தகுமாா், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் கு.விவேகானந்தன், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் சுமிதா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.