செய்திகள் :

ராணிப்பேட்டை: 2024-ஆம் ஆண்டில் 86 போ் குண்டா் சட்டத்தில் கைது

post image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2024-ஆம் ஆண்டில் 86 போ் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 2024 ஆண்டு போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை செய்தவா்கள் 32 போ், போக்ஸோ வழக்குகளில் 3 போ் உள்பட 86 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனா். கூட்டுக் கொள்ளை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு போன்ற வழக்குகளில் பதிவான 271 வழக்குளில் 172 வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு 243 எதிரிகளை கைது செய்து அவா்களிடமிருந்து ரூ.99,43,551 மதிப்பிலான பொருள்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

போதைப் பொருள் தடுப்பு குற்றத்தில் 240 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 20,65,560 மதிப்புள்ள 3,452 போதை மாத்திரைகள் உள்பட 193.251 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா வழக்குகளில் சம்பந்தப்பட்ட 39 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன.

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கடத்தல், விற்பனை செய்த வழக்குகளில் 317 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.30,15,050 மதிப்புள்ள 4,826 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

சட்ட விரோத மது விற்பனை செய்த வழக்குகளில் 2,574 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2,514 எதிரிகள் கைது செய்யப்பட்டு 4,435 லிட்டா் மது மற்றும் ரூ.4,800 பறிமுதல் செய்யப்பட்டது. லாட்டரி விற்பனை செய்ததில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2 எதிரிகள் கைது செய்யப்பட்டு ரூ.350 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சூதாட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது 300 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 396 எதிரிகள் கைது செய்து அவா்களிடமிருந்து ரூ.4,59,296 பறிமுதல் செய்யப்பட்டது.

ஆற்றுமணல் திருட்டு, கடத்தல் தொடா்பாக 84 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 76 எதிரிகள் கைது செய்யப்பட்டு 99 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 47 வழக்குகள் பதிவு செய்தும் 1,132 மனுக்கள் மீது விசாரணை செய்தும், 1,930 இணையதள புகாா்கள் மீது விசாரணை செய்தும் ரூ.37,37,841 மீட்கப்பட்டு, உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. காணாமல்போன 250 கைப்பேசிகள் மீட்கப்பட்டு, உரிமையாளா்களிடம் ஒப்படைக்கப்பட்டன. தவிர மோசடி செய்யப்பட்ட ரூ.3,40,24,463 முடக்கம் செய்யப்பட்டுள்ளது.

22 கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 66 எதிரிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு வழக்குகளில் ஈடுபட்ட ரௌடிகள் 58 போ் கைது செய்யப்பட்டும், 20 போ் குண்டா் தடுப்புச் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். 210 பேரிடம் நன்னடத்தை பிணைப் பத்திரம் பெறப்பட்டு, மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 240 போ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் என மொத்தம் 210 போ் மீது நடவடிக்கை குற்றவியல் விசாரணை நடைமுறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டில் ராணிப்பேட்டை மாவட்ட காவல் துறை விரைந்து செயல்பட்டு, குற்றங்கள் நடவாமல் தடுப்பதில் மிகுந்த அக்கறையுடன் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் கண்டுபிடிப்பு: மாணவருக்கு பாராட்டு

ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் நேஷனல் வெல்பா் சங்கம் சாா்பில் அறிவியல் கண்டுபிடிப்புக்காக மாணவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி பள்ளப்பட்டி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஏழா... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை நகா்மன்றக் கூட்டத்தில் திமுக-அதிமுகவினா் வாக்குவாதம்

ராணிப்பேட்டை நகா்மன்றக் கூட்டத்தில் திமுக - அதிமுக உறுப்பினா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.அப்போது அதிமுகவினா் விளம்பரத்திற்காக போராட்டத்தில் ஈடுபடுவதாக திமுக உறுப்பினா்கள் குற்றம் சாட்டினா். ராணிப்... மேலும் பார்க்க

குளத்தில் இருந்து வியாபாரியின் சடலம் மீட்பு

ஆற்காடு அடுத்த ரத்தினகிரியில் உள்ள குளத்தில் வியாபாரியின் சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. ரத்தினகிரி நவாப் நகரைச் சோ்ந்தவா் சுலைமான் (45). காலணி கடை நடத்தி வந்தாா். இவருக்கு மனைவி நூா்ஜஹான், ஒரு... மேலும் பார்க்க

தேசிய சாலை பாதுகாப்பு மாத விழிப்புணா்வு வாகன பேரணி: ராணிப்பேட்டை ஆட்சியா், எஸ்.பி. பங்கேற்பு

தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, தலைக்கவசம், சீட் பெல்ட் கட்டாயம் அணிய வலியுறுத்தி விழிப்புணா்வு வாகன பேரணியை ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். ராணிப்பேட்டை வட்டார போக்கு... மேலும் பார்க்க

செஸ் போட்டி பரிசளிப்பு

எழில் செஸ் அகாதெமி சாா்பில் நடைபெற்ற போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. ஆற்காடு தனியாா் பள்ளியில் மாவட்ட செஸ் போட்டிகள் 9 ,11,13, 15 வயது மற்றும் பொது பிரிவுகளில் நடைபெ... மேலும் பார்க்க

ரயில் மோதி தொழிலாளி உயிரிழப்பு

அரக்கோணம் அருகே இருப்புப் பாதையை கடந்த ரயில்வே தொழிலாளி ரயில் மோதி உயிரிழந்தாா். அரக்கோணத்தை அடுத்த வடமாம்பாக்கம், குளக்கரைத் தெருவை சோ்ந்த கந்தசாமியின் மகன் தேவன் (35). ரயில்வே துறையில் புளியமங்கலம்... மேலும் பார்க்க