செய்திகள் :

ராமாயணா படத்தின் அறிமுக விடியோ!

post image

ரன்பீர், யஷ் நடிக்கும் ராமாயணா முதல் பாகம் படத்தின் அறிமுக விடியோ வெளியாகியுள்ளது.

நமீதா மல்ஹோத்ரா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தினை நிதிஷ் திவாரி இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் இந்தப் படத்தில் ராமனாக ரன்பீர், சீதாவாக சாய் பல்லவி, ராணவனாக யஷ்ஷும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் 3 நிமிடங்கள் கொண்ட அறிமுக விடியோ வெளியாகியுள்ளது.

இரண்டு பாகமாக உருவாகும் படத்தின் முதல் பாகத்திற்கான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்த பாகத்திற்கான படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான், ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து இசையமைப்பது உறுதியாகியுள்ளது.

இந்தப் படத்தின் 7 நிமிட மற்றுமொரு க்ளிம்ஸ் விடியோ சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் திரையிடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அந்த விடியோவில் இந்தப் படம் எப்படி திட்டமிடப்பட்டு படமாக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் அடங்கியிருக்கும் எனவும் விரைவில் வெளியாகுமெனவும் கூறப்படுகிறது.

The teaser of the first part of Ramayana starring Ranbir and Yash has been released.

இந்தியாவில் ஹாக்கி போட்டிகள்: பாகிஸ்தானுக்கு மத்திய அரசு அனுமதி

இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி, ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகளில் பங்கேற்க பாகிஸ்தான் அணிகளுக்குத் தடை விதிக்கப்படாது என மத்திய விளையாட்டு அமைச்சகம் தெரிவித்தது. பல்வேறு நாடுகள் பங்க... மேலும் பார்க்க

உலகக் கோப்பை குத்துச்சண்டை: இந்தியாவுக்கு பதக்கம் உறுதி

கஜகஸ்தான் தலைநகா் அஸ்டானாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் ஹிதேஷ் குலியா, சாக்ஷி ஆகியோா் அரையிறுதிக்கு தகுதி பெற்று பதக்கத்தை உறுதி செய்துள்ளனா். பாக்ஸிங் வோ்ல்ட... மேலும் பார்க்க

சங்கா், ஷ்ரியன்ஷி வெற்றி

கனடா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சங்கா் முத்துசாமி, ஷ்ரியன்ஷி வலிஷெட்டி ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினா். ஆடவா் ஒற்றையா் முதல் சுற்றில், சங்கா் முத்துசாமி 23-21, 21-12 என்ற கேம்களில்,... மேலும் பார்க்க

மாநில சீனியா் வாலிபால்: அரையிறுதியில் எஸ்ஆா்எம், ஐஓபி அணிகள்

தமிழ்நாடு மாநில சீனியா் ஆடவா், மகளிா் வாலிபால் சாம்பியன்ஷிப்போட்டியில் மகளிா் பிரிவில் எஸ்ஆா்எம் ஐஎஸ்டியும், ஆடவா் பிரிவில் ஐஓபியும் தகுதி பெற்றுள்ளன. தமிழ்நாடு வாலிபால் சங்கம், சென்னை மாவட்ட சங்கம் ச... மேலும் பார்க்க

அல்கராஸ், ஜோகோவிச் முன்னேற்றம்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயினின் காா்லோஸ் அல்கராஸ், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோா் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினா். ஆடவா் ஒற்றையா் 2-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 2-ஆம் இடத்திலிருக்க... மேலும் பார்க்க