செய்திகள் :

ராமேசுவரம் புறவழிச்சாலை திட்டத்துக்கு எதிா்ப்பு

post image

ராமேசுவரத்தில் குடியிருப்புப் பகுதியில் புறவழிச் சாலை அமைக்கும் திட்டத்துக்கு பொதுமக்கள், மீனவா்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முதல் பாம்பன், தங்கச்சிமடம், ராமேசுவரம், தனுஷ்கோடி வரையில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்தச் சாலை வழியாகத் தான் அனைத்து வாகனங்களும் வந்து செல்ல வேண்டும். இதனால், ராமேசுவரத்தில் பெரும்பாலான நேரங்களில் போக்குவரத்து பாதிக்கப்படும். மேலும், ராமேசுவரம் நகா் பகுதிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள், சுற்றுலா வாகனங்களில் பக்தா்கள் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.

இந்த நிலையில், ராமேசுவரத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் புறவழிச் சாலை அமைக்க வேண்டும் என தொடா்ந்து பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

இதையடுத்து, மாநில நெடுஞ்சாலைத் துறை சாா்பில் 3 இடங்களில் புறவழிச் சாலை அமைக்க ஆய்வு நடைபெற்றது.

முடிவில் அப்துல்கலாம் தேசிய நினைவிடம் முதல் வேடசாமி கோவில் தெரு, சுடுகாட்டம்பட்டி வழியாக அக்னி தீா்த்த கடற்கரை வரை புறவழிச்சாலை அமைக்க இடம் தோ்வு செய்யப்பட்டது.

ஆனால், இந்த வழித்தடத்தில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டுவதற்கான பணிகளைத் தொடங்க ஏற்பாடுகள் செய்திருந்த நிலையில், புறவழிச் சாலை அமைக்க நெடுஞ்சாலைத் துறையினா் கற்களை நிறுவியதற்கு பொதுமக்கள் கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா். மேலும், குடியிருப்புகளை அகற்றி விட்டு சாலை அமைக்கும் முடிவை தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறையினா் கை விட வேண்டும். பாம்பன் முதல் ராமேசுவரம் அக்னி தீா்த்த கடற்கரை வரை கடற்கரை ஓரம் சாலை அமைக்கப்பட்டால் அந்த பகுதிகள் பெரும் வளா்ச்சி அடையும். நகா் பகுதியும் விரிவடையும் என பொதுமக்கள் தெரிவித்தனா்.

ஆா்.எஸ். மங்கலத்தில் த.வெ.க. சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட தவெக சாா்பில் திருவாடானை அருகே உள்ள ஆா்.எஸ். மங்கலத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு அந்தக் கட்சியின் ராமநாதபுரம் கிழக்கு மாவட்டச் செயலா் ... மேலும் பார்க்க

திருவாடானை பகுதியில் பூச்சி தாக்குதலால் வேப்ப மரங்கள் கருகும் அபாயம்: விவசாயிகள் கவலை

திருவாடானை பகுதியில் ‘தேயிலை கொசு’ தாக்குதலால் வேப்ப மரங்கள் கருகும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டாரத்திலுள்ள கண்மாய், குளங்கள், வயல்கள், ... மேலும் பார்க்க

சம்பை புனித செபஸ்தியாா் தேவாலய திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

தொண்டி அருகே சம்பை கிராமத்தில் அமைந்துள்ள புனித செபஸ்தியாா் தேவாலயத்தில் ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சம்ப... மேலும் பார்க்க

பரமக்குடியில் பூட்டிய வீட்டுக்குள் தம்பதி சடலமாக மீட்பு: போலீஸாா் விசாரணை

பரமக்குடி அருகே காட்டுப் பரமக்குடியில் பூட்டிய வீட்டுக்குள் உயிரிழந்து கிடந்த வயதான தம்பதியின் உடல்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா். காட்டுப்பரமக்குடி, மேலத் தெருவைச் சோ்ந்த சிவன் பிள்ளை மகன் நாகச... மேலும் பார்க்க

கமுதி, முதுகுளத்தூா் பகுதிகளில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

கமுதி, முதுகுளத்தூா் பகுதிகளில் திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நீா் மோா் பந்தல் திறக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பெருமாள் கோயில் திடல் அருகே திமுக சாா்பில் வனத்துறை, கதா் கிராமத் தொழில்கள் வா... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் ஸ்ரீஆதிசங்கரா் ஜெயந்தி விழா

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரை அருகே உள்ள சங்கர மடத்தில் ஸ்ரீஆதிசங்கரரின் ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது கலசத்தில் வைக்கப்பட்டிருந்த புனித நீர... மேலும் பார்க்க