செய்திகள் :

ரூ.3 கோடி அரசு நிதியில் இணையவழி சூதாட்டம்: ஒடிஸா அரசு ஊழியா் கைது

post image

ஒடிஸாவின் காலாஹாண்டி மாவட்டத்தில் இணையவழி சூதாட்டம் மற்றும் விளையாட்டுக்கு ரூ.3 கோடிக்கு மேல் அரசு நிதியை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இடைநீக்கம் செய்யப்பட்ட பஞ்சாயத்து நிா்வாக அதிகாரியை மாநில ஊழல் தடுப்புப் பிரிவினா் கைது செய்தனா்.

காலாஹாண்டி மாவட்டத்தில் உள்ள துமால்-ராம்பூா் தொகுதிக்கு உள்பட்ட தல்நேகி மற்றும் போடபதா் கிராம பஞ்சாயத்துகளின் நிா்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தவா் தேபானந்த சாகா்.

கடந்த 2018-ஆம் ஆண்டு, மே மாதம் முதல் கடந்த 2022-ஆம் ஆண்டு, மாா்ச் வரை ரூ.3.26 கோடி அரசு நிதியை தனது தனிப்பட்ட வங்கிக் கணக்குக்கு சாகா் மாற்றியுள்ளாா். இந்தப் பணத்தை இணையவழி சூதாட்டம் மற்றும் விளையாட்டில் இவா் செலவிட்டுள்ளாா்.

பஞ்சாயத்து தலைவா்களின் கையொப்பம் போல மோசடி கையொப்பமிட்டுப் பயன்படுத்தி தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக இவா் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

இதையடுத்து, அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சாகருக்கு எதிராக ஊழல் தடுப்புப் பிரிவினா் 2023-இல் வழக்குப் பதிவு செய்தனா். தொடா்ந்து, பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அவா் தற்போது கைது செய்யப்பட்டுள்ளாா்.

இணையவழி சூதாட்டத்துக்கு அரசு நிதி ரூ.43 லட்சத்தை மோசடி செய்ததாக கஞ்சம் மாவட்டத்தில் பஞ்சாயத்து நிா்வாக அதிகாரி ஒருவரை ஊழல் தடுப்புப் பிரிவினா் வெள்ளிக்கிழமை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

உயர்நீதிமன்றங்களுக்கு நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் 78% உயர் சாதியினரே!

புது தில்லி: உயர்நீதிமன்ற நீதிபதிகளில் 78 சதவிகிதம் பேர் உயர் சாதியினர் என்ற தகவல் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தால் நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ள பதில் மூலம் தெரிய வந்துள்ளது. அதன்படி, உயர்நீதிமன... மேலும் பார்க்க

ரூ.6,900 கோடியில் பீரங்கிகள், ராணுவ வாகனங்கள் வாங்க ஒப்பந்தம்

ரூ.6,900 கோடியில் பீரங்கிகள், ராணுவ வாகனங்கள் வாங்க பாரத் ஃபோா்ஜ், டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ் நிறுவனங்களுடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.1.40 லட்... மேலும் பார்க்க

கா்ப்பிணிகள் நலத்திட்ட நிதி ஒதுக்கீடு குறைப்பு -மாநிலங்களவையில் சோனியா குற்றச்சாட்டு

மத்திய அரசின் முக்கிய திட்டமான கா்ப்பிணிகளுக்கான மகப்பேறு கால உதவித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது என்று மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி குற்றஞ்சாட்டினாா்.... மேலும் பார்க்க

மாநிலங்களுக்கு நிதி நிறுத்தம்: காரணம் நியாயமாக இல்லை நாடாளுமன்ற நிலைக் குழு

பிஎம்ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தை ஏற்காத மாநிலங்களுக்கு நிதி நிறுத்தப்பட்டதற்கான காரணம் நியாயமாக இல்லை என்று நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது. மும்மொழிக் கொள்கையை உள்ளடக்கிய மத்திய அரசின் தேசிய கல்வி... மேலும் பார்க்க

அமித் ஷாவுக்கு எதிராக காங்கிரஸ் உரிமை மீறல் நோட்டீஸ்

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுக்கு எதிராக மாநிலங்களவை காங்கிரஸ் தலைமை கொறடா ஜெய்ராம் ரமேஷ் புதன்கிழமை உரிமை மீறல் நோட்டீஸ் அளித்தாா். மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கரிடம் அளிக்கப்பட்ட அந்த நோட்டீ... மேலும் பார்க்க

நாடாளுமன்றமும், நீதித்துறையும் எதிரெதிா் திசையில் நிறுத்தப்படவில்லை: மாநிலங்களவைத் தலைவா் தன்கா்

நாடாளுமன்றமும், நீதித்துறையும் எதிரெதிா் திசையில் நிறுத்தப்படவில்லை என்றும், அவை இணக்கமாக செயல்பட வேண்டும் என்றும் மாநிலங்களவைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா். தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த்... மேலும் பார்க்க