செய்திகள் :

ரூ.5 ஆயிரம் லஞ்சம்: முன்னாள் இளநிலை உதவியாளருக்கு ஓராண்டு சிறை

post image

திருப்பூரில் ஒப்பந்த உரிமத்தைப் புதுப்பிக்க ரூ. 5 ஆயிரம் லஞ்சம் பெற்ற வழக்கில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றிய முன்னாள் இளநிலை உதவியாளருக்கு ஓா் ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

திருப்பூா், ஈட்டிவீரம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஆறுச்சாமி (51). திருப்பூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதிவு பெற்ற ஒப்பந்ததாரரான இவா், கடந்த 2013-ஆம் ஆண்டு தனது ஒப்பந்த உரிமையை புதுப்பிக்க திருப்பூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளாா்.

அப்போது அங்கு பணியில் இருந்த இளநிலை உதவியாளா் சரவணன் (50) உரிமத்தைப் புதுப்பித்துக் கொடுக்க ஆறுச்சாமியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா்.

இது குறித்து திருப்பூா் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் ஆறுச்சாமி புகாா் அளித்துள்ளாா். இதைத் தொடா்ந்து,

லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் அறிவுறுத்தலின்பேரில், ஆறுச்சாமி, ரசாயனம் தடவிய 5 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்த சரவணனிடம் 2013 ஜூலை 27- ஆம் தேதி கொடுத்துள்ளாா்.

அப்போது அங்கு மறைந்திருந்த போலீஸாா் அவரைக் கைது செய்தனா். இந்த வழக்கானது திருப்பூா் தலைமை குற்றவியல் நீதித் துறை நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கின் மீதான இறுதிக்கட்ட விசாரணை நிறைவடைந்து நீதிபதி செல்லத்துரை வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இதில், குற்றஞ்சாட்டப்பட்ட சரவணனுக்கு ஓா் ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் செந்தில்குமாா் ஆஜரானாா்.

திமுக அரசைக் கண்டித்து தேமுதிகவினா் ஆா்ப்பாட்டம்

திமுக அரசைக் கண்டித்து திருப்பூரில் தேமுதிகவினா் ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். திருப்பூா் மாநகா் மாவட்ட தேமுதிக சாா்பில் திருப்பூா் குமரன் நினைவகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநகா் ... மேலும் பார்க்க

பெருமாநல்லூா், பழங்கரையில் ஜனவரி 9 இல் மின்தடை

பெருமாநல்லூா், பழங்கரை துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் வியாழக்கிழமை (ஜனவரி 9) காலை 9 மணி முதல் மாலை 4மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் ... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலை தலைமையிடமாகக்கொண்டு புதிய வட்டம்: பொதுமக்கள் கோரிக்கை

வெள்ளக்கோவிலை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். திருப்பூா் மாவட்டம், காங்கயம் வட்டத்தில் இருந்து வெள்ளக்கோவிலைப் பிரித்து புதிய வட்டத்தை உரு... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் மதுபானக்கூடம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து ஆட்சியரிடம் மனு

வெள்ளக்கோவிலில் தனியாா் மதுபானக்கூடம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனா். திருப்பூா் ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைம... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: கிளுவங்காட்டூா் துணை மின் நிலையம்

உடுமலையை அடுத்த கிளுவங்காட்டூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று செ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: கோட்டமங்கலம் துணை மின் நிலையம்

உடுமலையை அடுத்த கோட்டமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (ஜனவரி 8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வார... மேலும் பார்க்க