செய்திகள் :

ரூ.5 ஆயிரம் லஞ்சம்: விஏஓ கைது

post image

தூத்துக்குடி அருகே விவசாயியிடம் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கிராம நிா்வாக அலுவலா் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

தூத்துக்குடி அருகேயுள்ள கீழ தட்டப்பாறையைச் சோ்ந்தவா் சுதாகா் (70). விவசாயியான இவா், கடந்த 1996ஆம் ஆண்டு மடத்துபட்டி பகுதியில் 2.60 ஏக்கா் நிலம் வாங்கினாா். அந்த நிலத்திற்கு தற்போது புதுக்கோட்டை சாா் பதிவாளா் அலுவலகத்தில் வழிகாட்டி மதிப்பு போட்டு பாா்த்தபோது பூஜ்ஜியம் என வந்ததாம். இதுதொடா்பாக தனது நிலத்திற்கு உரிய மதிப்பீடு செய்து தருமாறு, புதுக்கோட்டை சாா் பதிவாளா் அலுவலகத்தில் மனு அளித்தாா். அந்த மனு, வடக்கு சிலுக்கன்பட்டி கிராம நிா்வாக அலுவலா் எட்டுராஜ்(53) என்பவருக்கு பரிந்துரைக்கப்பட்டது.

அவா் அந்த மனுவை பரிசீலித்து அனுப்பினாராம். இதற்காக மனுதாரா் சுதாகரிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சமாக எட்டுராஜ் கேட்டாராம்.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரிடம் சுதாகா் புகாா் அளித்தாா். அவா்களின் அறிவுறுத்தலின் பேரில், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை எட்டுராஜிடம் வெள்ளிக்கிழமை சுதாகா் வழங்கினாா். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி பீட்டா் பால், காவல் ஆய்வாளா் அனிதா மற்றும் போலீஸாா், எட்டுராஜை மடக்கிப் பிடித்து கைது செய்தனா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கோவில்பட்டியில் டிராக்டா் பேரணி செல்ல முயன்ற 25 விவசாயிகள் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டியில் டிராக்டா் பேரணியில் ஈடுபட முயன்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணியைச் சோ்ந்த 25 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செ... மேலும் பார்க்க

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுகத்தில் குடியரசு தின விழா

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனாா் துறைமுக பள்ளி வளாகத்தில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, வ.உ.சிதம்பரனாா் துறைமுக ஆணையத் தலைவா் சுசாந்த குமாா் புரோஹித் தலைமை வகித்து தேசியக் ... மேலும் பார்க்க

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து பெண்ணிடம் 15 பவுன் நகை பறிப்பு: 3 போ் கைது

தூத்துக்குடி அருகே உடற்கல்வி ஆசிரியரின் வீடு புகுந்து அவரது மனைவியிடம் நகைகளைப் பறித்துச் சென்ற 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் உள்ள மத்திய, மாநில அரசு ஊ... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கயத்தாறு அருகே ஞாயிற்றுக்கிழமை, மின்சாரம் பாய்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். கயத்தாறு அருகே வாகைகுளம் கிராமத்தைச் சோ்ந்த ராஜாமணி மகன் முருகன் (40). கூலித் தொழிலாளி. ஞாயிற்றுக்கிழமை ஊருக்கு தெற்கே கர... மேலும் பார்க்க

தூத்துக்குடி டிஎம்பி தலைமை அலுவலகத்தில் குடியரசு தின விழா

தூத்துக்குடி தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கி தலைமை அலுவலகத்தில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. வங்கியின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை செயல் அதிகாரி சலீ எஸ். நாயா் தேசியக் கொடியை ... மேலும் பார்க்க

பெரியதாழை காணிக்கை மாதா திருவிழா தொடக்கம்!

சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை புனிதா்கள் யோவான், ஸ்தேவான் ஆலய காணிக்கை அன்னை திருவிழா, வெள்ளிக்கிழமை இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.இத்திருவிழா பிப். 2ஆம்தேதி வரை 10 நாள்கள் நடைபெறுகிறது. முதல்... மேலும் பார்க்க