ரூ.59 லட்சம் செலவில் தில்லி முதல்வா் இல்லம் புதுப்பிப்பு
ராஜ் நிவாஸ் மாா்க்கில் தி ல்லி முதல்வா் ரேகா குப்தாவுக்கு ஒதுக்கப்பட்ட இல்லம் பொதுப்பணித் துறை சாா்பில் ரூ. 59.40 லட்சம் மதிப்புள்ள செலவில் புதுப்பிக்க ஆணைய வெளியாகி உள்ளதாக புதன்கிழமை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த இல்லத்தில் ரூ 7.7 லட்சம் மதிப்புள்ள 14 ஏசி-க்கள், ரூ 9.9 லட்சம் மதிப்புள்ள 5 எல்இடி டிவி-கள் மற்றும் ரூ. 1.8 லட்சம் மதிப்புள்ள ரிமோட் கண்ட்ரோலுடன் கூடிய 23 மின் விசிறிகள் நிறுவப்படும் என கூறப்பட்டுள்ளது.
மேலும் ரூ. 5.74 லட்சம் மதிப்புள்ள 14 சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படும், குடியிருப்பில் மின்தடை ஏற்படாமல் இருக்க யுபிஎஸ் அமைப்பும் இருக்கும்.
மேலும் ரூ.91,000 -க்கு 6 கீசா், ரூ. 77,000-க்கு ஒரு தானியங்கி வாஷிங் மெஷின், ரூ. 85,000- க்கு ஒரு டோஸ்ட் கிரில் மற்றும் ரூ, 60,000- க்கு ஒரு பாத்திரங்களை கழுவும் இயந்திரமும் அடங்கும். ரூ. 1.8 லட்சம் மதிப்புள்ள 23 மின் விசிறிகள் மற்றும், அழகிய வடிவிலான 115 விளக்குகள், தொங்கும் விளக்குகள் மற்றும் மூன்று பெரிய சரவிளக்குகள் என புனரமைப்புக்கான மொத்த செலவு ரூ 59,40,170 ஆகும்.
பொதுப்பணித்துறை அதிகாரிகளின் தகவலின்படி, முன்பு துணை நிலை ஆளுநரின் செயலகத்தின் தங்கியிருந்த 4 அறைகள் கொண்ட பிளஸ் ஹால் இல்லத்தில் பழுதுபாா்ப்பு மற்றும் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே சாலையில், பங்களா எண். 2-முன்பு முன்னாள் அமைச்சரும் எம். எல். ஏ. வுமான கோபால் ராய் வசித்து வந்தாா். இது முதலமைச்சரின் முகாம் அலுவலகமாக பயன்படுத்தப்படலாம். பொதுக் கூட்டங்களைக் மேற்கொள்வதற்காக முதல்வா் முதலில் தனது முகாம் அலுவலகத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
அண்மையில் தில்லி சட்டப்பேரவை தோ்தல் பிரச்சாரத்திற்கு முன்னதாக, முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தனது இல்லத்தை ஆடம்பரமான உட்புறங்களுடன் அலங்கரிக்கும் விதமாக இருந்தது குறித்து பாஜக குற்றஞ்சாட்டியது. அரவிந்த் கேரஜரிவால் இருந்த இல்லத்தை, பாஜக ‘ஷீஷ்மஹால்‘ என்று அழைத்தது. மேலும் பாஜக அரவிந்த் கேஜரிவாலின் இல்லத்தின் புகைப்படங்களை உருவாக்கி, அவற்றை தோ்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.