செய்திகள் :

லாஃப்ரா யாழினி ஐபிஎஸ் – அத்தியாயம் 5 | தொடர்கதை | My Vikatan

post image

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்.

கமிஷனரின் அழைப்பை எடுத்து லாஃப்ரா “சொல்லுங்கள் சார்” என்று கூறி கமிஷனரின் வார்த்தையை எதிர்நோக்கி காத்திருந்தாள்.

“கூடிய சீக்கிரம் விருப்ப ஓய்வு வாங்கப்போகிறேன் லாஃப்ரா, நான் இந்த வேலையில் இருந்து. அழுத்தம் தாங்க முடியவில்லை”

லாஃப்ரா மீண்டும்,” சொல்லுங்கள் சார்” என்றாள்

”நாளை காலை ஏழு மணிக்கு முதல் அமைச்சர் வீட்டுக்கு போய்விடம்மா. முதல் அமைச்சர் உன்னை  பெயர் சொல்லி வரச்சொன்னார்”

”தனியாகவா சார்?”

“முதல் அமைச்சர் நல்லவர் லாஃப்ரா. தனியாகவே போய்விடு” என்று இணைப்பை துண்டித்தார் கமிஷனர்.

உடனேயே மீண்டும் லாஃப்ராவுக்கு அழைப்பு வந்தது. அழைத்தது கமிஷனர்.

“சொல்லுங்கள் சார்”

“நான் விருப்ப ஓய்வு வாங்குவதாக சொன்னதெல்லாம் நமக்குள். முதல் அமைச்சரிடம் சொல்லிவிடாதே” என்றார்.

“கட்டாயம் சார். குட்  நைட் சார்” என்றாள் புன்முறுவலுடன் லாஃப்ரா.

இணைப்பை துண்டித்தார் கமிஷனர்.

லாஃப்ராவின் தலைமையில் அந்த டீம் மீண்டும் கூடியது. லாஃப்ரா சொன்னாள்,” நான் நினைப்பது சரியென்றால் இந்த கேஸ் முடிந்துவிட்டது. நாளை காலை தெரிந்துவிடும். அனைவரும் நேரத்திற்கு வந்து விடுங்கள். நான் வர  சற்று  தாமதமாகலாம்”

அடுத்த நாள் காலை ஏழு மணி. முதல் அமைச்சர் இல்லத்தில் இருந்தாள் லாஃப்ரா. தகுந்த அனுமதி பெற்று உள்ளே சென்றாள்.

முதல் அமைச்சர் அவளுக்காக காத்திருந்தார். புன்சிரிப்புடன் அவளை வரவேற்று,’ லாஃப்ரா யாழினி, நீ தானாம்மா. வாழ்த்துக்கள். உங்களைப் போன்ற இளைஞர்கள் எல்லாம் அரசியலுக்கு வந்தால் நாட்டுக்கு நல்லதம்மா” என்றார்.

“கட்டாயம் சார்” என்ற லாஃப்ராவிடம் தொடர்ந்து,”தப்பாக நினைச்சுக்காதே லாஃப்ரா. நான் மூன்று பெட்டிகள் உன் வண்டியில் வச்சுருக்கேன். தாமு தெரியுமில்ல?” என்று கேட்டார்.

அவள் பதிலை எதிர்பார்க்காமலே தொடர்ந்தார்,” அவரிடம் அந்த பெட்டிகளை சேர்த்து விடு. தேர்தல் நேரம். எனக்கு வேற வழி தெரியல்ல”

“சொல்லுங்கள் சார், இரண்டு தட்டு தட்டி உள்ளே வைத்துவிடுகிறேன்”

“அவ்வளவு எளிதல்ல லாஃப்ரா. சுமூகமாய் முடித்துக்கொள்வோம்”

“சரி சார். உங்கள் நாள் நன்றாக அமையட்டும்” என்று சொல்லி வெளியே வந்தாள் லாஃப்ரா.

க்வாலிஸ் தயாராக இருந்தது.

ஓட்டுனரிடம் வண்டியை வெளியே எடுக்கச் சொன்ன லாஃப்ரா வசதியாக ஏறி அமர்ந்து கொண்டாள். முதல் அமைச்சர் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் லாஃப்ரா,”எங்கே போகணும் தெரியுமா?” என்று ஓட்டுனரிடம் கேட்டாள்.

“தெரியும் மேடம்” என்றார் அவர்.

“போகுமுன் நான் சொல்லும் வழியாக செல்லுங்கள்” என்றாள் லாஃப்ரா.

அவள் சொன்ன இடம் போனதும், கீழே இறங்கிய லாஃப்ரா, சிறிது நேரம் நிறுத்திவிட்டு பின் மீண்டும் தன் பயணம் தொடர்ந்தாள்.

தாமோதரன் வீடு, அடையாரில் ஒரு தனி பங்களாவாக இருந்தது. வெளியே நாய்கள் ஜாக்கிரதை அறிவிப்பு தொங்கியது.

செக்யூரிட்டி,” யார் மேடம்?”’என்றான்.

தன் விசிட்டிங் கார்ட் எடுத்து நீட்டினாள் லாஃப்ரா.

“உள்ளே வாங்க மேடம். தலைவர் உங்களுக்காகத் தான் காத்திருக்கிறார்” என்று கதவை திறந்தான் செக்யூரிட்டி. கதவு சப்தம் போடாமல் திறந்தது.

உள்ளே நுழைந்த க்வாலிஸ் பார்த்து குலைக்காமல் படுத்து கிடந்த டாபர்மேன் கண்ணை மட்டும் திருப்பி லாஃப்ராவை பார்த்தது.

வீட்டின் முகப்பில் சென்ற லாஃப்ராவை தாமுவின் செயலாளர் நிறுத்தினான். கீழே ஹாலில் நான்கைந்து கட்சி தொண்டர்கள் சிதறி இருந்தனர்.

லாஃப்ராவைப் பார்த்த ஒருவன்,”டீஎஸ்பி. டீஎஸ்பி” என்று கிசுகிசுத்தான்.

மொபைலில் பேசிய தாமுவின் செயலாளர், லாஃப்ராவிடம்,” நீங்கள் மேலே வாங்க” என்று சொல்லி, கையைப் பிடிக்காத குறையாக வழி நடத்தி சென்றான்.

தாமு என்னும் தாமோதரன் இருந்த அறை நல்ல வசதியாக இருந்தது.

டேபிள் டென்னிஸ் போர்ட் அளவுக்கு ஒரு மேஜை போடப்பட்டிருந்தது. அதன் பின்னால் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த தாமு எழுந்து வந்து லாஃப்ராவை வரவேற்றார்.

தாமுவைப் பார்த்த லாஃப்ரா,’இந்த அரசியல்வாதிகள் எல்லாம் எப்படி தான் எப்பொழுதும் ஃப்ரெஷாக இருக்கிறார்களோ’ என்று தனக்குள் எண்ணிக் கொண்டாள்.

எழுந்து வந்த தாமு பெரிதாக கிடந்த ஒரு சோஃபாவில் வசதியாக அமர்ந்து கொண்டு,”எனவே நீங்கள் தான் லாஃப்ரா யாழினியா?” என்று எகத்தாளமாக கேட்டார்.”என் மகள் ரூபாவை கடத்தி வைத்துள்ளீர்கள். எனது வீட்டு வேலையாள், அமர்சிங்கையும் கடத்தி உள்ளீர்கள்”

லாஃப்ரா அமைதியாக இருந்தாள்.

ஒரு நிமிட இடைவெளி விட்டு பின் அவரே தொடர்ந்தார்,”முதல் அமைச்சரிடம் இருந்து சேதி ஏதாவது…?” 

“ஆமாம் சார், இருக்கிறது.  உங்களுடன் தனியாக பேசினால் நன்றாக இருக்கும்”

“நாம் தனியாகத் தானே இருக்கிறோம்” என்ற தாமு, செயலாளரைப் பார்த்து,”அவனைப் பற்றி கவலைப்படாதே. அவனுக்கு தெரியாமல் எதுவும் நடக்காது”

லாஃப்ரா ஆரம்பித்தாள்,” சார், நான் உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போகிறேன். ஒரு நபர் ஒரு வங்கியில் இருந்து தற்காலிக ஓவர்டிராஃப்ட் வாங்கி இருக்கிறார். அதை கட்ட வேண்டிய தேதி வந்தும் அதை கட்டாமல் இழுத்தடித்துள்ளார்.

தேர்தல் நேரம். அரசியல் கட்சிகளின் சுத்தமான பிம்பம் காக்கப்பட வேண்டிய நேரம்.

அந்த தொகையை புரட்ட முடியாதவருக்கு அரசியல் நெருக்கடி கொடுப்போம் என்று வங்கி அதிகாரிகளின் மிரட்டல்.

என்ன செய்வதென்று தெரியாமல் அவர் அவதிப்பட்டு கொண்டிருந்த பொழுது, மகள் வயதில் இருந்த அவருடைய காதலி அந்த யோசனையை சொல்லி இருக்கிறாள். அருமையான யோசனை. மகள் கடத்தப் பட்டதாக ஒரு நாடகம் போடலாம் என.

அதுவும் அந்த நபர் வெளி ஊரில் இருக்கும் பொழுது. காதலியே தன் கைப்பட ரான்சம் நோட் எழுதி வைத்திருக்கிறாள். கடத்தலை நிரூபிக்க அவர் வீட்டில் கொத்தடிமையாக வேலை பார்த்தவனை கொண்டு வீட்டினுள் களேபரம் செய்திருக்கிறார்.

வெளியே சென்ற மகளை தன் இன்னொரு கோடவுனில் தங்க வைக்கிறார்.

காவலர்கள் வந்ததை காதலி அவருக்கு தெரிவிக்கிறாள், தன் பேச்சு பதிவாவது தெரியாமலேயே. பின்னர் சென்னை ஜனங்களில் தொலைந்தும் போகிறாள்.

இதில் பரிதாபம் என்னவென்றால் அந்த கொத்தடிமை மகளின் காதலன்.

அந்த நபர் யோசித்தது என்னவென்றால், இந்த கடத்தல் நாடகம் மூலம் கொத்தடிமை காதலன் கைது செய்யப்படுவான். ஏனென்றால் அவன் வந்த மாநிலம் அப்படி. அந்த நபர் ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடிக்க திட்டமிடுகிறார். கொத்தடிமையும் கைது செய்யப்படுவான். காலப்போக்கில் மகளும் அவனை மறந்து விடுவாள்.

அவர் எதிர்பார்த்த படியே, காவலர்கள் ஊடகங்களுக்கு செய்தி வெளியிடவில்லை.

தன் அரசியல் செல்வாக்கு மூலம் முதல் அமைச்சருக்கு அழுத்தம் கொடுத்து தன் ஓவர்டிராஃப்ட் தொகையை வசூல் செய்ய நினைக்கும் நேரத்தில்……” லாஃப்ரா சற்று இடைவெளி விட்டாள்.

“தொடரட்டுமா?” என்றாள் லாஃப்ரா.

குளிரூட்டம் செய்யப்பட்ட அந்த அறையிலும் தாமோதரனுக்கு வியர்த்தது.

“வேண்டாம் மேடம்” தாமு,  மேடம்  என்று சொன்னதை புன்முறுவலுடன் லாஃப்ரா கவனித்தாள்.

“இப்பொழுது ரூபாவை நீங்களே வெளிக்கொணர்வீர்களா அல்லது நாங்கள் ஊடகங்களுக்கு போகட்டுமா?”

ஊடகங்களுக்கு காவல் துறை போனால், தான் எந்தவிதமான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என்று உணர்ந்திருந்த தாமு “நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார்.

“அப்பொழுது முதல்வருக்கு”

“நான் பேசிக்கொள்கிறேன் மேடம். லோடை இறக்கிவிட்டு பின்னாடியே இன்கம் டாக்சை அனுப்புவீர்கள் நீங்கள்”

”அப்பொழுது முதல்வரிடம் அனுப்பியது வந்தடைந்தது என்று ஒரு வார்த்தை சொன்னால் நன்றாய் இருக்கும்”

இதோ சொல்கிறேன்” என்ற தாமு முதல்வருக்கு அழைப்பு விடுத்து,” ”ஐயா வணக்கம். நீங்கள் அனுப்பியது வந்தடைந்தது ” என்று சொல்லி வைத்தார்.

லாஃப்ரா மேலும் தொடர்ந்தாள்,”வங்கியில் வாங்கிய ஓவர்டிராஃப்ட்?”

“கூடிய சீக்கிரம் கட்டிவிடுவேன்” என்ற தாமு, பின் லாஃப்ராவிடம், “எனக்கு ஒரே ஒரு கேள்வி. அமர்சிங் எங்கே மேடம்?” என்றார்.

லாஃப்ரா சொன்னாள்,” இந்நேரம் அவன் சொந்த ஊர் அடைந்திருப்பான்.”

வெளியே வந்ததும் லாஃப்ரா, முதல் அமைச்சருக்கு அழைப்பு விடுத்தாள். அவர் எடுத்ததும்,” சார், தாமு சார் வீட்டில் இருந்து பேசுகிறேன். நீங்கள் சொன்ன வேலை முடிந்துவிட்டது” என்று முடித்தாள்.

முதல்வர் தொடர்ந்தார்,” மிக மகிழ்ச்சி லாஃப்ரா. உங்களைப் போன்ற இளைஞர்கள் எல்லாம் அரசியலுக்கு வரவேண்டும்”

லாஃப்ரா புன்சிரிப்புடன் சொன்னாள்,”கட்டாயம் சார்”

அடுத்து கமிஷனருக்கு அழைப்பு செய்த லாஃப்ரா,” சார், காலை வணக்கங்கள். ரூபாவின் வழக்கு முடிந்துவிட்டது” என்று அறிக்கை சமர்ப்பித்தாள்.

அடுத்து இன்ஸ்பெக்டர் அபிக்கு அழைப்பு விடுத்த லாஃப்ரா,” அபி, இன்று மதியம் நம் டீமுக்கு பிரியாணி வழங்கிவிடு. செலவு என்னுடையது”

”ரூபா கேஸ் மேடம்” என்ற அபியிடம்,”முடிந்துவிட்டது” என்றாள்,”நான் வர தாமதமாகும். பார்த்துக் கொள். வந்து சொல்கிறேன்” என்று முடித்தாள்.

தன் வீடு சென்ற லாஃப்ரா தன் எதிரே வந்து நின்ற அமர்சிங்கின் தோற்றம் பார்த்து சந்தோஷம் கொண்டாள். மொட்டை அடித்து ஆளே மாறி இருந்தான்.

“அமர்சிங் உன்னால் ஒரு வேலை இல்லை இரண்டு வேலைகள் நடக்க வேண்டும். அது முடிந்தவுடன் உனக்கு பாட்னா செல்ல விமான டிக்கெட் போட்டுள்ளேன். மேலும் நீ கொடுத்த வங்கி கணக்கிற்கு, என்னால் முடிந்த தொகை, ஐந்து லட்சம் அனுப்பிவைக்கிறேன். இது தாமுவிடம் தான் வசூல் செய்ய வேண்டும். பரவாயில்லை. நான் பார்த்துக் கொள்கிறேன். ரூபாவை மறந்துவிடு. யாராவது நல்ல பெண்ணை சொந்தத்தில் பார்த்து கல்யாணம் செய்து கொள்” என்று நிறுத்தினாள்.

சூரியன் மேற்கில் உதித்தாலும் உதிக்கும் ஆனால் கமிஷனர் தன் அலுவலகத்தில் பத்து மணிக்கு இருப்பது தவறாது.

இது நன்கு தெரிந்திருந்த லாஃப்ரா,  பதினோறு மணிக்கு அமர்சிங்கை அழைத்துக் கொண்டு வெளியில் கிளம்பினாள்.

ஒரு குறிப்பிட்ட வீட்டில் அமர்சிங்கை விட்டு முதல் அமைச்சர் தனக்கு கொடுத்த மூன்றில் ஒரு சூட்கேசை டெலிவரி செய்தாள்.

அரை மணி நேரம் கழித்து, லாஃப்ராவிற்கு அபியிடம் இருந்து ஒரு அழைப்பு வந்தது.” என்ன அபி?” என்றாள் லாஃப்ரா.

“மேடம், இன்று யாரோ ஒரு நல்ல மனிதன் காவலர் சேமநிதிக்கு இரண்டு சூட்கேஸ்கள் நன்கொடை கொடுத்திருக்கிறார். இரண்டு கோடியாம்”

“அப்படியா நல்லது” என்றாள் லாஃப்ரா.”சிசிடிவி பார்த்தீர்களா?”

“யாரோ ஒருவன் மொட்டை அடித்து முகம் மறைக்க கூலிங்கிளாஸ் போட்டவன் வந்து நம் டிப்பார்ட்மெண்ட்டில் கொடுத்துவிட்டு போய் விட்டான். அதில் இருந்த காகிதத்தில் காவலர் சேமநிதிக்கு என்று அச்சிடப்பட்டு இருந்தது”

அந்த மொட்டையடித்தவன் மீனம்பாக்க விமான நிலையத்தில் பாட்னா விமானம் ஏற நின்று கொண்டிருந்தான்.

நன்கு தூங்கி எழுந்த லாஃப்ரா ஃப்ரெஷ் ஆகி கமிஷனர் ஆஃபிஸ் சென்றாள்.

“வாழ்த்துக்கள் மேடம்” என்று அவளுடைய டீம் அவளை சூழ்ந்துகொண்டது.

லாஃப்ரா தனிமையில் தன் அலுவலகத்தில் இரவு சூழப்போகும் வேளையில் அமர்ந்திருந்தாள் ஒரு அழைப்பை எதிர்பார்த்து.

கமிஷனர் அழைத்தார்,” லாஃப்ரா, உனக்கு அடுத்த கேஸ் வந்துவிட்டது”

“சொல்லுங்கள் சார்” என்றாள் புன்முறுவலுடன் லாஃப்ரா.

”என் வீட்டில் ஒரு சூட்கேஸ் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. முழுவதும் பணம். நல் ஓய்வு பெற வாழ்த்துக்கள் என்ற குறிப்புடன்”

“நீங்கள் கொடுத்து வைத்தவர் சார்” என்றாள் லாஃப்ரா.

”அவன் மட்டும் என் கையில் கிடைக்கட்டும். அவனுக்கு இருக்கிறது”

“சார் உங்கள் ஓய்வு பெறப் போகும் வாழ்க்கைக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்” என்றாள் லாஃப்ரா.

“இணைப்பு துண்டித்தார் கமிஷனர்.

கமிஷனர் பற்றி நன்கு  தெரிந்திருந்த லாஃப்ரா காத்திருந்தாள்.

அடுத்த நொடியே மீண்டும் அழைப்பு வந்தது. கமிஷனர் தான், ”லாஃப்ரா சூட்கேஸ் விவகாரம் நம் இருவருக்குள் மட்டும்” என்றார்.

”கட்டாயம் சார்” என்றாள் புன்சிரிப்புடன் லாஃப்ரா.

அன்புடன்

மீரா போனோ

(எஃப்.எம்.பொனவெஞ்சர்)

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU

புத்தகங்களும் அதை வாசிப்பவர்களிடம் உண்டாக்கும் தாக்கமும்; ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை - பகுதி 17

தொழில் என்னவோ புத்தகக் கடைதான், ஆனால் அதில் விற்கப்படும் புத்தகங்களும் அதை வாசிப்பவர்களிடம் உண்டாக்கும் தாக்கமும் அமெரிக்க வெள்ளை இனவாத அரசுக்கு நெருக்கடியைத் தரும் அல்லவா...அமெரிக்கா என்பது மாகாணங்கள... மேலும் பார்க்க

மார்ட்டின் லூதர் கிங் கொலை முயற்சியில் மிஷாவ்- ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை - பகுதி 16

கறுப்பர்களை இனப்பாகுபாட்டோடு நடத்துவதற்கு எதிராக, அமெரிக்காவில் ஏராளமான குடியுரிமை அமைப்புகள் போராடி வந்தன.அவற்றில் குறிப்பிடத்தக்க இயக்கம் மார்ட்டின் லூதர் கிங் தலைமையில் செயல்பட்ட ‘தெற்கு கிறிஸ்துவ ... மேலும் பார்க்க

தற்சார்பு பொருளாதாரமும் புத்தகக் கடையும் - ஒரு புத்தகக் கடைக்காரரின் கதை - பகுதி 15

அடிமை முறையை அமெரிக்க மண்ணிலிருந்து சட்டப்பூர்வமாக அகற்ற வேண்டும் என்று கோரிக்கைகள் மேலெழுந்த 19-ம் நூற்றாண்டிலேயே, புத்தகக் கடைகள் - கறுப்பர்களுக்கான பிரத்யேக புத்தகக் கடைகள் அமெரிக்காவில் உதயமாகத் த... மேலும் பார்க்க

`தாள்கள் உருவாக்கிய தானைத் தலைவன்' - ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை - பகுதி 14

லூயிஸ் மிஷாவ் - பெட்டி லோகன் தம்பதியினரின் மகன் லூயிக்கும் மால்கமுக்குமான நட்பு இந்த நேர்காணலுக்குத் தேவையா? அவசியமாக இருந்தால் சேர்த்துக் கொள்ளலாம். இல்லையென்றால் பத்திரிகைக்கு எழுதிக் கொடுக்கும் பிர... மேலும் பார்க்க

`காகித நேசம்' - ஒரு புத்தகக்கடைக்காரரின் கதை - பகுதி 13

அமெரிக்க கறுப்பினப் போராளி மால்கம் X பற்றிய பேச்சு எழுந்ததால், லூயிஸ் மிஷாவ்வுக்கும் மால்கமுக்குமான நெருக்கம் பற்றிய தகவல்களோடு, நேர்காணல் சுவாரஸ்யமாகப் போவதாக நினைத்தேன்.ஆனால், மிஷாவ் தன் மனைவியின் ப... மேலும் பார்க்க

கண்ணுக்குத் தெரியாதவன் கதை சொல்கிறேன்... கேட்பீர்களா?! | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின்... மேலும் பார்க்க