செய்திகள் :

லிடியன் நாதஸ்வரத்திற்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

post image

திருக்குறளை உள்வாங்கிடும் வகையில் குறளிசைக் காவியம் படைத்துள்ள இசைக் கலைஞர்கள் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்தவர்ஷினி ஆகியோரைப் பாராட்டி வாழ்த்துகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

பதின்பருவம் கடக்கின்ற இளம் வயதிலேயே, உலகப் பொதுமறையான திருக்குறளைக் குழந்தைகள் முதல் அனைத்து வயதினரும் உள்வாங்கிடும் வகையில் குறளிசைக் காவியம் படைத்துள்ள உடன்பிறப்புகள் லிடியன் நாதஸ்வரம் மற்றும் அமிர்தவர்ஷினி ஆகியோரைப் பாராட்டி வாழ்த்துகிறேன்!

இசையில் தோய்ந்து பல திறமைமிக்க குரல்களில் ஒலித்திடும் குறளமுதத்தினை அனைவரும் கேட்டிட வேண்டும்! குறளிசைக்காவியம் எல்லோர் உள்ளங்களில் நிலைபெற்றிட வேண்டும்! என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

To experience the songs in their true mastered sound, please turn OFF volume normalisation in your Spotify settings.

விஜய்யால் ஒன்றும் செய்ய முடியாது: அமைச்சர் ராஜகண்ணப்பன்

யார் வேண்டுமானாலும் மாநாடு நடத்தி, கூட்டத்தை கூட்டலாம். ஆனால் அதில் பங்கேற்கும் சிறியவர்களால் ஓட்டுக் கிடைக்காது என தமிழக வனம் மற்றும் கதா்துறை அமைச்சா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் கூறினாா்.சென்னையில் ஞாயிற்... மேலும் பார்க்க

தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படாதது ஏன்?: நயினாா்நாகேந்திரன் கேள்வி

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குறுதியில் கூறியபடி முதல்வா் மு.க.ஸ்டாலின் செயல்படாதது ஏன்? என தமிழக பாஜக மாநிலத் தலலைவா் நயினாா்நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் ... மேலும் பார்க்க

சந்திர கிரகணம்: திருமலை ஏழுமலையான் கோயில் கதவுகள் மூடல்

திருப்பதி: சந்திர கிரகணத்தையொட்டி திருமலையில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கதவுகள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு மூடப்பட்டது. சந்திர கிரகணம் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.50 மணி முதல் அதிகாலை 1.31... மேலும் பார்க்க

செயல்படாமல் இருக்கும் மருத்துவ உதவி மையம்: ரயில்வே பொது மேலாளருக்கு சு.வெங்கடேசன் எம்.பி. கடிதம்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் செயல்படாமல் இருக்கும் மருத்துவ உதவி மையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என ரயில்வே பொது மேலாளருக்கு மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.இது... மேலும் பார்க்க

மணிப்பூர் 3 மணி நேர பயணத்தால் என்ன சாதிக்க விரும்புகிறார் மோடி? : ஜெய்ராம் ரமேஷ் கேள்வி

மணிப்பூர் 3 மணி நேர பயணத்தின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி என்ன சாதிக்க விரும்புகிறார் என காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்த... மேலும் பார்க்க

ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் தளபதி சுட்டுக் கொலை!

ஜாா்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ரூ.10 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு தேடப்பட்டு வந்த மாவோயிஸ்ட் தளபதி சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.சத்தீ... மேலும் பார்க்க