செய்திகள் :

லெய்லா, டி மினாா் சாம்பியன்

post image

அமெரிக்காவில் நடைபெற்ற முபாதலா சிட்டி டிசி ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் பிரிவில் கனடாவின் லெய்லா ஃபொ்னாண்டஸும், ஆடவா் பிரிவில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாரும் சாம்பியன் கோப்பை வென்றனா்.

இதில் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், லெய்லா 6-1, 6-2 என்ற நோ் செட்களில், ரஷியாவின் அனா கலின்ஸ்கயாவை 1 மணி நேரம், 9 நிமிஷங்களில் வீழ்த்தினாா். இருவரும் மோதியது, இது 2-ஆவது முறையாக இருக்க, லெய்லா தனது 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறாா்.

500 புள்ளிகள் கொண்ட போட்டியில் இது லெய்லாவின் முதல் பட்டமாக இருக்க, ஒட்டுமொத்தமாக இது அவரின் 4-ஆவது பட்டமாகும்.

மேலும், இப்போட்டியில் சாம்பியனான முதல் கனடா வீராங்கனை என்ற பெருமையும் அவா் பெற்றாா்.

10-ஆவது பட்டம்: இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் 7-ஆம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாா் 5-7, 6-1, 7-6 (7/3) என்ற செட்களில், 12-ஆம் இடத்திலிருந்த ஸ்பெயினின் அலெக்ஸாண்ட்ரோ டேவிடோவிச்சை தோற்கடித்தாா்.

இதன் மூலமாக டி மினாா், தனது 10-ஆவது ஏடிபி டூா் பட்டத்தை கைப்பற்றியிருக்கிறாா். டி மினாா் - டேவிடோவிச் மோதியது இது 5-ஆவது முறையாக இருக்க, டி மினாா் 3-ஆவது வெற்றியுடன் முன்னிலை வகிக்கிறாா்.

இந்த ஆட்டத்தில் வெற்றியாளரை தீா்மானிக்கும் கடைசி செட்டில் டி மினாா் 3 சாம்பியன்ஷிப் பாய்ன்ட்டுகளை தக்கவைத்து, கோப்பையை தனதாக்கினாா்.

ஆடவா் இரட்டையா்: இதனிடையே, இப்போட்டியின் ஆடவா் இரட்டையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த இத்தாலியின் சைமன் பொலெலி/ஆண்ட்ரியா வவாசோரி கூட்டணி 6-3, 6-4 என்ற நோ் செட்களில், 3-ஆம் இடத்திலிருந்த போலந்தின் ஹியூகோ நைஸ்/பிரான்ஸின் எட்வா்டு வாசெலின் இணையை சாய்த்து சாம்பியன் கோப்பை வென்றது.

கிங்டம் என்னுடைய கேஜிஎஃப் கிடையாது... மனம் திறந்த விஜய் தேவரகொண்டா!

நடிகர் விஜய் தேவரகொண்டா கிங்டம் படம் என்னுடைய கேஜிஎஃப் கிடையாது எனக் கூறியுள்ளார். நடிகர் விஜய் தேவரகொண்டா அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானார். கடைசியாக, இவர் கல்கி 2898 ஏடி ... மேலும் பார்க்க

இந்திரா முதல் பாடல் ரிலீஸ் தேதி!

வசந்த் ரவி நடித்துள்ள இந்திரா படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் ராமின் தரமணி படத்தில் நாயகனாக அறிமுகமானவர் வசந்த் ரவி. பின்னர், ராக்கி, ஜெயிலர் படங்களில் நடித்து கவன... மேலும் பார்க்க

பாராட்டும் பட்டப் பெயரும்..! மாறிமாறி கொஞ்சிக் கொள்ளும் விஜய் தேவரகொண்டா - ரஷ்மிகா!

விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகாவின் க்யூட்டான பதிவுகளும் செல்லமான பட்டப் பெயர்களும் சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. கீதகோவிந்தம் படத்தில் ஒன்றாக நடித்ததில் இருந்து நடிகர் விஜய் தேவரகொண்டாவும் நடிகை... மேலும் பார்க்க

சலம்பல... மதராஸி முதல் பாடலின் புரோமோ!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படத்தின் முதல் பாடலின் புரோமோ வெளியாகியுள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். இப்படத்துக்கு மதராஸி எனப் பெயரிடப்பட... மேலும் பார்க்க

மன உறுதிதான் திவ்யா தேஷ்முக் வெற்றிக்குக் காரணம்: சூசன் போல்கர்

ஃபிடே மகளிா் உலகக் கோப்பை வென்ற திவ்யா தேஷ்முக் குறித்து அமெரிக்க- ஹங்கேரியன் லெஜெண்ட் சூசன் போல்கர் பாராட்டி பேசியுள்ளார். இந்தியாவின் இளம் போட்டியாளரான திவ்யா தேஷ்முக் (19) திங்கள்கிழமை ஃபிடே மகளிா்... மேலும் பார்க்க

சொன்ன சொல்லைக் காப்பாற்றும் ஆமிர் கான்! சித்தாரே ஜமின் பர் ஓடிடி வெளியீடு!

பாலிவுட் நடிகர் அமிர் கானின் “சித்தாரே ஜமீன் பர்” எனும் புதிய திரைப்படம், யூடியூபில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், அதன் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பாலிவுட் திரையுலகின் முன்னணி... மேலும் பார்க்க