அரசியல் ரீதியாக அமலாக்கத் துறை செயல்பாடு: சித்தராமையா மனைவிக்கு எதிரான வழக்கில் ...
வங்கதேசம்: பள்ளியில் விழுந்த போர் விமானம்; 19 பேர் பலி- நடந்தது என்ன?
வங்கதேச தலைநகர் டாக்காவில் உள்ள பள்ளி வளாகத்தில் ராணுவத்துக்குச் சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று நொறுங்கி விழுந்து பயங்கர விபத்துக்குள்ளாகி இருக்கிறது.
வங்கதேசத்தில் விமானப் படைக்குச் சொந்தமான எஃப் - 7 பிஜிஐ என்ற போர் விமானம், இன்று (ஜூலை 21) பயிற்சியில் ஈடுபட்டிருந்தது.

தலைநகரான டாக்காவிற்கு வடக்கே உள்ள உத்தரா பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது பிற்பகல் 2.03 மணிக்கு அங்கிருந்த மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகி இருக்கிறது.
விமானம் உடனடியாக தீப்பிடித்து எரிந்ததில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்ததாக, தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் விமானத்தில் பற்றிய தீயைக் கட்டுக்குள்கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளி வளாகத்தில் விழுந்து நொறுங்கியதில் 19 பேர் பலியாகி இருப்பதாகவும் 50க்கும் அதிகமானோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.