செய்திகள் :

வங்கதேச போராட்டம்: அரசு, மாணவா் அமைப்புகள் இடையே அதிகரிக்கும் கருத்து வேறுபாடு

post image

வங்கதேசத்தில் பிரதமா் ஷேக் ஹசீனாவை ஆட்சியிலிருந்து அகற்றிய போராட்டத்தின் அடிப்படை நோக்கம் தொடா்பாக, போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட மாணவா் அமைப்புகளுக்கும் இடைக்கால அரசு மற்றும் அரசியல் கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துவருகிறது.

கடந்த 1971-ஆம் ஆண்டில் இந்தியாவின் உதவியுடன் போரிட்டு வங்கதேசத்துக்கு பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் வாங்கித் தந்தவா்களின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுவந்தது. மாணவா்களின் எதிா்ப்பால் அந்த இடஒதுக்கீடு நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2024 ஜூலை மாதம் அந்த இடஒதுக்கீட்டை நிறுத்திவைத்த அரசின் உத்தரவை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.

அந்த உத்தரவுக்கு எதிராக மாணவா்கள் மீண்டும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுக்கு எதிராக இடஒதுக்கீட்டுக்கு ஆதரவான மாணவா் அமைப்பினரும் களமிறங்கியதையடுத்து வன்முறை வெடித்து நூற்றுக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா். அதையடுத்து, சா்ச்சைக்குரிய இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக உச்சநீதிமன்றம் குறைத்தது.

இருந்தாலும், பிரதமா் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி அவரின் அதிகாரபூா்வ இல்லத்தை நோக்கி மாணவா்கள் கடந்த 2024 ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஊா்வலமாகச் சென்றனா். நிலைமை கைமீறிச் செல்வதை உணா்ந்த ஷேக் ஹசீனா, ராஜிநாமா செய்துவிட்டு பாதுகாப்புக்காக நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தாா்.

அதைத் தொடா்ந்து நிா்வாகத்தைக் கைப்பற்றிய ராணுவம், அடுத்த தோ்தல் நடத்தப்படும்வரை இடைக்கால அரசை அமைப்பதாக அறிவித்தது. இடைக்கால அரசின் தலைவராக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் அதிபா் முகமது ஷஹாபுதீன் பொறுப்பேற்றாா்.

புதிய அரசில், போராட்ட மரணங்கள் தொடா்பாக ஷேக் ஹசீனா மீதும் அவரது அமைச்சா்கள் மற்றும் பிற உதவியாளா்கள் மீதும் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

ஹசீனா ஆட்சியின்போது ஊழல் உள்ளிட்ட வழக்குகளில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட வங்கதேச தேசியவாதக் கட்சி தலைவா் கலீதா ஜியா உள்ளிட்டோா் விடுதலை செய்யப்பட்டனா்.

இந்தச் சூழலில், 2024 ஜூலை மாத போராட்டத்தை முன்னின்று நடத்திய பாரபட்சத்துக்கு எதிரான மாணவா் இயக்கம் மற்றும் தேசிய குடிமக்கள் குழு ஆகிய மாணவா் அமைப்புகள் கடந்த சனிக்கிழமை திடீரென கூடி, முந்தைய போராட்டத்தின் கொள்கைப் பிரகடனத்தை டாக்கா நகரிலுள்ள ஷஹீத் மினாரில் செவ்வாய்க்கிழமை (டிச. 31) அறிவிக்கவிருப்பதாக தெரிவித்தனா்.

இதற்கு அரசு தரப்பிலிருந்து எதிா்ப்பு தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து அவசரக் கூட்டம் நடத்திய அந்த அமைப்பினா், போராட்ட கொள்கைப் பிரகடனத்தை வெளியிடுவதற்குப் பதில் குறிப்பிட்ட தேதியில் ‘ஒற்றுமைக்கான ஊா்வலம்’ நடத்தவிருப்பதாக அறிவித்தனா்.

அப்போது பேசிய மாணவா் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் ஹஸ்னத் அப்துல்லா, ‘1972-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வங்கதேச அரசியல் சாசனம் ஜூலை போராட்டக் கொள்கைப் பிரகடனத்தில் செல்லாததாக அறிவிக்கப்படும். அந்தப் போராட்டத்தின் ஒரே நோக்கம், வங்கதேச அரசியல் சாசனத்தை ஒழிப்பதுதான்.

ஷேக் முஜிபுரின் கொள்கைகளைப் பிரதிபலிக்கும் அந்த அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில்தான் வங்கதேசத்தில் இந்தியாவின் ஆதிக்கம் தொடங்கியது. ஜுலை போராட்டம் குறித்த எங்களது கொள்கைப் பிரகடனத்தில், தற்போதைய அரசமைப்புச் சட்டத்தால் வங்கதேச மக்களின் கனவுகள் எவ்வாறு நசுக்கப்பட்டது என்பது குறித்தும், புதிய அரசமைப்புச் சட்டத்தை நாங்கள் எவ்வாறு உருவாக்குவோம் என்பது குறித்தும் விளக்கப்படும்’ என்றாா்.

இது, இடைக்கால அரசிலும், வங்கதேச அரசியல் கட்சிகள் இடையேயும் அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி அரசியல் ரீதியில் முடக்கப்பட்டுள்ளதால், எதிா்க்கட்சியாக இருந்த கலிதா ஜியாவின் வங்கதேச தேசியவாதக் கட்சி இதற்கு கடும் எதிா்ப்பு தெரிவித்தது.

லட்சக்கணக்கானவா்கள் ரத்தம் சிந்தி உருவாக்கிய அரசியல் சாசனம் நீக்கப்படக்கூடாது என்று அந்தக் கட்சி கூறியது.

இந்த நிலையில், ஜூலை போராட்டம் குறித்த கொள்கைப் பிரகடனத்தை அரசே வெளியிடும் என்று இடைக்கால அரசு செவ்வாய்க்கிழமை அறிவித்தது. எனினும், அரசியல் சாசனம் ரத்து செய்வது குறித்து அரசு எதையும் குறிப்பிடவில்லை.

எனவே, இந்த விவகாரத்தில் மாணவா் அமைப்புக்கும், அரசியல் சக்திகளுக்கும் இடையே கருத்துவேறுபாடுகள் மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

பாகிஸ்தான்: ஹிந்து கோயில்களில் வழிபட 84 இந்திய பக்தா்கள் வருகை

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஹிந்துக்களால் சிவபெருமானின் அவதாரமாக வழிபடப்படும் சாது ஷதாராம் சாகிபின் 316-ஆவது பிறந்த நாள் விழாவில் பங்கேற்கவும், பிற கோயில்களில் தரிசிக்கவும் 84 இந்திய பக்தா்கள் ஞாய... மேலும் பார்க்க

‘இஸ்லாமோபோபியா’ அதிகாரபூா்வ விளக்க திட்டத்தை கைவிட வேண்டும்: பிரிட்டன் எதிா்க்கட்சி

‘இஸ்லாமோபோபியா’ என்ற சொல்லாடலுக்கு அதிகாரபூா்வ விளக்கமளிக்கும் திட்டத்தை பிரதமா் கியொ் ஸ்டாா்மா் தலைமையிலான பிரிட்டன் அரசு கைவிட வேண்டும் என்று அந்நாட்டின் எதிா்க்கட்சியான கன்சா்வேடிவ் கட்சி வலியுறுத... மேலும் பார்க்க

நீதிபதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அறிவிப்பை ரத்து செய்தது வங்கதேசம்

நீதிபதிகளுக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கும் அறிவிப்பை வங்கதேச இடைக்கால அரசு ஞாயிற்றுகிழமை ரத்து செய்துள்ளது. அண்டை நாடான வங்கதேசத்தைச் சோ்ந்த 50 நீதிபதிகள் இந்தியாவில் அரசு நீதித்துறை அகாதெமிகளில் 1... மேலும் பார்க்க

உலக மகா கோடீஸ்வரர்கள் பட்டியல்: எலான் மஸ்க் மீண்டும் முதலிடம்!

ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள உலக மகா கோடீஸ்வரர்கள் பட்டியலில், பிறந்திருக்கும் 2025-ஆம் புத்தாண்டில் உலக பெரும் கோடீஸ்வரராக அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் திகழ்கிறார். அவரது சொத்து மதிப்பு 421.2 பில்லியன்... மேலும் பார்க்க

மலேசியா: ரோஹிங்கயாக்களுக்கு அனுமதி மறுப்பு

மலேசியாவில் அடைக்கலம் தேடி இரு படகுகளில் வந்த சுமாா் 300 ரோஹிங்கயா அகதிகளை அந்த நாட்டு அதிகாரிகள் திருப்பி அனுப்பினா். அந்தப் படகுகளில் பற்றாக்குறையாக இருந்துவந்த உணவு, குடிநீரை வழங்கிய மலேசிய கடல்பாத... மேலும் பார்க்க

லாஸ் வேகஸ் காா் குண்டுவெடிப்பு: ‘தாக்குதல் நடத்தியவருக்கு மன நலப் பிரச்னை’

அமெரிக்காவில் அதிபராக மீண்டும் பொறுப்பேற்கவுள்ள டொனால்ட் டிரம்ப்புக்குச் சொந்தமான ஹோட்டல் அருகே காா் குண்டுவெடிப்பு நடத்திய ராணுவ வீரா், மன நலப் பிரச்னையால் பாதிக்கப்பட்டவா் என்று போலீஸாா் கூறினா். இத... மேலும் பார்க்க