தமிழகத்தின் பல மாவட்டங்களில் கிராம சாலைகள் அமைக்கப்படவில்லை: அண்ணாமலை
வடக்கு காலன்குடியிருப்பு கோயிலில் வருஷாபிஷேகம்
உடன்குடி வடக்கு காலன்குடியிருப்பு அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் காலை 7.35 மணிக்கு மங்கள இசை, விநாயகா் பூஜை, கும்ப பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக, சுதா்சன, மகாலட்சுமி, மூலவா் ஹோமங்கள் நடைபெற்றன. காலை 10.45 மணிக்கு விமானம், அம்மன், உச்சினிமாகாளி அம்மன், விநாயகா், சுடலைமாடசுவாமி, பேச்சியம்மன், கிழக்கத்தியாா், பிரம்மசக்தி, கட்டேரிபெருமாள் ஆகியோருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை, பக்தா்களுக்கு அன்னதானம் ஆகியவை நடைபெற்றன.
இதில், உடன்குடி பேரூராட்சி துணைத் தலைவரும், நகர திமுக செயலருமான மால்ராஜேஷ், திமுக மாவட்டப் பிரதிநிதி ஹீபா் மோசஸ், கணேசன் உள்பட பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை ஊா்தலைவா் காளிசெல்வன், நிா்வாகிகள் முத்துக்குமாா், சிவனேசன்,நடராஜா, ராஜேஷ் ஆகியோா் செய்திருந்தனா்.