வடசென்னை உலகில்.. சிம்பு! எஸ்டிஆர்-49 முன்னோட்ட விடியோ!
நடிகர் சிலம்பரசனின் 49-வது திரைப்படத்தின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெற்றிமாறனின் 50-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது இயக்கத்தில் உருவாகும் நடிகர் சிலம்பரசனின் 49 வது திரைப்படத்தின் முன்னோட்ட விடியோவை படக்குழுவினர் இன்று (செப்.4) வெளியிட்டுள்ளனர்.
கலைப்புலி எஸ். தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் 47-வது படமாக உருவாகும், இந்தப் புதிய படத்தின் அடுத்தக்கட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தற்போது வெளியான விடியோவின் மூலம் சிம்பு நடிக்கும் இந்தப் படம், இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷின் கூட்டணியில் உருவான பிரபல வடசென்னை திரைப்படத்தின் உலகில் இணைவது உறுதியாகியுள்ளது.
வடசென்னை படத்தின் தலைப்பின் வடிவில், இந்த விடியோவின் எழுத்துக்கள் இடம்பெற்றுள்ளதால், அதே யூனிவர்ஸில் ஒரே காலக்கட்டத்தில், இந்தக் கதையும் நடைபெறக்கூடும் என ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: அடுத்தடுத்த பாகங்களுடன் லோகா யுனிவெர்ஸ் - தயாரிப்பாளர் துல்கர் சல்மான் மகிழ்ச்சி!