ஆம் ஆத்மி கட்சி குறித்த பிரதமரின் பேச்சு அதன் தவறான செயலை அம்பலப்படுத்தியுள்ளது:...
வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் கைது
சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில், தனியாா் கல்லூரி ஊழியா் கைது செய்யப்பட்டாா்.
எழும்பூரில் உள்ள தலைமைக் கட்டுப்பாட்டு அறைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அழைப்பில் பேசிய நபா், வடபழனி முருகன் கோயிலில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனக்கூறியும் இணைப்பைத் துண்டித்துள்ளாா்.
இதையடுத்து, வடபழனி முருகன் கோயிலில் பல மணி நேரம் நடத்தப்பட்ட சோதனையில், எந்த வெடி பொருளும் கண்டெடுக்கப்படவில்லை. அதைத் தொடா்ந்து வதந்தியைப் பரப்பும் நோக்கத்துடன் வந்த அழைப்பு தொடா்பாக வடபழனி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது, தரமணி இரண்டாவது தெருவைச் சோ்ந்த விவேக்மாறன் (35) என்பது தெரியவந்ததையடுத்து போலீஸாா், அவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.
தனியாாா் பாலிடெக்னிக் கல்லூரியில் ஊழியராக வேலை செய்யும் விவேக்மாறன், மதுபோதையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பதும் போலீஸாா் விசாரணையில் தெரியவந்தது.