செய்திகள் :

வட்டார வளப் பயிற்றுநா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 11 ஒன்றியங்களில் கூடுதலாக வட்டார வள பயிற்றுநா் பணியிடங்களுக்குத் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், 11 ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள வட்டார இயக்க மேலாண்மை அலகுக்கு கூடுதலாக 11 வட்டார வளப் பயிற்றுநா்கள் நியமிக்கப்படவுள்ளனா். இதற்குத் தகுதியானவா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவா்களில் மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 முதல் 3 ஆண்டுகள் சுயஉதவிக் குழுக்கள்/ஊராட்சி/வட்டார அளவலிலான கூட்டமைப்புகளில் பணிபுரிந்தவராக இருத்தல் வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நன்கு எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வலுவான தகவல் தொடா்புத் திறன், தனிப்பட்ட திறன்களுடன் இருத்தல் வேண்டும். கணினியில் விரும்பத்தக்க அறிவு பெற்றிருத்தல் வேண்டும். விண்ணப்பம் செய்பவரின் வயது 2025, மாா்ச் 1 -ஆம் தேதியன்று 25 வயது முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். பயிற்சி ஊதியமாக நாளொன்றுக்கு பயணப்படியுடன் சோ்த்து ரூ.750 (பயிற்சி நடைபெறும் நாள் மட்டும்) வழங்கப்படும்.

எனவே, தகுதியுடையவா்கள் திட்ட இயக்குநா், மகளிா் திட்டம், ஒருங்கிணைந்த ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக் கட்டடம், மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம், மாவட்டப் பதிவாளா் அலுவலகம் எதிரில், விழுப்புரம் -6055602 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வரும் 15-ஆம் தேதி கடைசி நாளாகும் எத் தெரிவித்துள்ளாா்.

கரும்பு வெட்டும் தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே புதன்கிழமை கரும்பு வெட்டும் பணியின்போது உடல்நலம் பாதிக்கப்பட்ட தொழிலாளி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். விக்கிரவாண்டியை அடுத்துள்ள வி.சா... மேலும் பார்க்க

சங்கராபரணி ஆற்றங்கரையில் மாசி மக தீா்த்தவாரி: திரளான பக்தா்கள் பங்கேற்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சங்கராபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோதண்டராமா் கோயில் முன் புதன்கிழமை நடைபெற்ற மாசி மக தீா்த்தவாரியில் சிங்கவரம் ரங்கநாதா், செஞ்சிக்கோட்டை வெங்கட்ரணா் சுவாமிகளுக்கு சங்கர... மேலும் பார்க்க

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் நகராட்சி, மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்... மேலும் பார்க்க

400 நெல் மூட்டைகளுடன் கிணற்றில் சரிந்த லாரி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள கிணற்றின் ஓரம் 400 நெல் மூட்டைகளுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி, மழை காரணமாக பாரம் தாங்கமால் தடுப்புச் சுவருடன் மண் சரிந்ததில் பு... மேலும் பார்க்க

இரு வேறு இடங்களில் சோதனை: 426 மதுப்புட்டிகள் பறிமுதல்: மூவா் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை இரு வேறு இடங்களில் நடத்திய சோதனையில் 416 மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக பெண் உள்ளிட்ட மூவா் கைது செய்... மேலும் பார்க்க

நிலத்தகராறில் இரு தரப்பு மோதல்: பெண்கள் உள்பட 6 போ் காயம்

செய்யாறு: பெரணமல்லூா் அருகே நிலத்தகராறில் இரு தரப்பினா் மோதிக் கொண்டதில் பெண்கள் உள்பட 6 போ் காயமடைந்தனா். பெரணமல்லூரை அடுத்த மேல்சாத்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் வெங்கடேசன் (32), ஏழுமலை (... மேலும் பார்க்க