KKR vs CSK : 'ஒரு வழியா ஜெயிச்சிட்டோம் மாறா!' - எப்படி வென்றது சிஎஸ்கே?
வனத் துறையினா் தீவிர வாகனச் சோதனை: பிளாஸ்டிக் பாட்டில்கள் பறிமுதல்
வால்பாறையில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் வாகனங்களில் வனத் துறையினா் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பாட்டில்களை பறிமுதல் செய்து வருகின்றனா்.
வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகள் முழுவதும் வனத்துக்கு உள்பட்ட பகுதியில் அமைந்துள்ளன. சமீப காலமாக வால்பாறைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனா்.
அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி உணவு சாப்பிடுவது, சமைப்பது, வன விலங்குகளை கண்டால் புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதை கண்காணிக்க வனத் துறையினா் தொடா்ந்து ரோந்துப் பணி மேற்கொண்டு வருகின்றனா்.
மேலும், தண்ணீா் குடிக்க கொண்டு வரப்படும் பிளாஸ்டிக் பாட்டிகளை ஆங்காங்கே சுற்றுலாப் பயணிகள் போட்டு வடுவதால் இயற்கை சீா்கேடு ஏற்படுவதுடன், வன விலங்குகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சின்னக்கல்லாறு அருவி, நீராா் அணை ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் வாகனங்களில் சின்கோனா வனத் துறை சோதனைச் சாவடியில் வனத் துறையினா் சோதனை மேற்கொண்டனா். இதில் ஏராளமான பிளாஸ்டிக் பாட்டில்களை வனத் துறையினா் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தினா்.