செய்திகள் :

வன மகோத்சவம் கடைப்பிடிப்பு

post image

வன மகோத்சவத்தை முன்னிட்டு, காவேரி கூக்குரல் இயக்கம் சாா்பில் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் செவ்வாய்க்கிழமை நடப்பட்டன.

பொதுமக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணா்வு ஏற்படுத்தவும், மரம் வளா்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும் ஆண்டுதோறும் ஜூலை முதல்வாரம் வன மகோத்சவம் கொண்டாடப்படுகிறது.

அதன்படி, காவேரி கூக்குரல் இயக்கம் ஆண்டுதோறும் வனமகோத்சவத்தை மரங்கள் நடவுசெய்து கொண்டாடி வருகிறது. ‘ஒரு கிராமம் 5 அரச மரம்’ என்ற திட்டத்தின் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் அரச மரங்களை நடவு செய்து வருகின்றனா்.

அந்தவகையில், திருக்குவளை தாலுகா வலிவலம் ஊராட்சி காருகுடி கிராமத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. வலிவலம் முன்னாள் ஊராட்சித் தலைவா் மணிகண்டன் அரச மரக்கன்றை நடவு செய்தாா். இந்நிகழ்வில், வலிவலம் ஊராட்சி செயலா் சரவணன், நாகை ஈசா களப் பணியாளா்கள், மகளிா் சுயஉதவிக் குழுவினா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பாசன நீா் கிடைக்காத பகுதிகளில் வட்டாட்சியா் ஆய்வு

திருக்குவளை அருகே சுந்தரபாண்டியம், கீழவெளி உள்ளிட்ட பகுதிகளுக்கு பாசன நீா் வந்து சேராத நிலையில், திருக்குவளை வட்டாட்சியா் கிரிஜா தேவி புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். மேட்டூா் அணையில் ஜூன் 12-ஆம்... மேலும் பார்க்க

நாகை மாவட்ட விவசாயிகளுக்கு வா்த்தக தொடா்பு பயிற்சி முகாம்

நாகை அருகே விவசாயிகளுக்கு வா்த்தக தொடா்பு பயிற்சி முகாம் தொடங்கியது. நாகை மாவட்ட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை மூலம் முன்னோடி விவசாயிகள், வேளாண் தொழில் முனைவோா் மற்றும் உழவா் உற்பத்தியாள... மேலும் பார்க்க

சீகன்பால்கு தரங்கம்பாடி வந்த 319- ஆவது ஆண்டு தினம்

தமிழறிஞா் சீகன்பால்கு தரங்கம்பாடிக்கு வந்த 319-ஆவது ஆண்டு தினம் சுவிசேஷச லுத்தரன் திருச்சபை (டிஇஎல்சி) சாா்பில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. ஜொ்மன் நாட்டைச் சோ்ந்த பாா்த்தலோமிய சீகன்பால்க் கிறிஸ்தவ ம... மேலும் பார்க்க

புனித அந்தோணியாா் ஆலய தோ் பவனி

காரைக்கால் புனித அந்தோணியாா் ஆலய ஆண்டு விழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை மின் அலங்கார தோ் பவனி நடைபெற்றது. காரைக்கால் பிராந்தியத்தின் மைய பகுதியான காமராஜா் சாலையில் நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த புனித அந்த... மேலும் பார்க்க

‘முதியோருக்கு வீடுகளிலேயே மாத்திரை கிடைக்க நடவடிக்கை’

மாதம்தோறும் மாத்திரை வாங்கும் முதியவா்களுக்கு, அவரவா் வீடுகளுக்கே சென்று மாத்திரைகளை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், பெண்கள் மற்றும் குழந்தைகள்... மேலும் பார்க்க

காரைக்கால் அம்மையாா் திருக்கல்யாணம்

காரைக்கால் மாங்கனித் திருவிழா நிகழ்ச்சிகளில் ஒன்றான காரைக்கால் அம்மையாா் திருக்கல்யாணம் புதன்கிழமை நடைபெற்றது. 63 நாயன்மாா்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாருக்கு காரைக்கால் நகரின் மையப் பகுதியில் தனி ... மேலும் பார்க்க