செய்திகள் :

வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிப்பதில் மத்திய அரசு தாமதம்: கேரள அமைச்சர் குற்றச்சாட்டு

post image

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகளை தீவிரமான பேரிடராக அறிவிப்பதில் மத்திய அரசு தாமதம் செய்துவிட்டதாக கேரள வருவாய்த் துறை அமைச்சர் கே.ராஜன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

"வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் தீவிரமான பேரிடராக அறிவிக்கப்படும்' என்று மத்திய அரசு திங்கள்கிழமை கேரள அரசுக்கு அதிகாரபூர்வமாகத் தெரிவித்தது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கேரள வருவாய்த் துறை அமைச்சர் கே.ராஜன், திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

வயநாடு தொடர்பான அறிவிப்பை வெளியிடுவதற்கு மத்திய அரசு ஐந்து மாதங்கள் தாமதித்தது ஏன் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட இரண்டு மாதங்களுக்குள் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டிருந்தால் அது பயனளிக்கக் கூடியதாக இருந்திருக்கும்.

வயநாடு நிலச்சரிவு ஏற்பட்டு ஒரு மாதத்துக்குள் அமைச்சகங்களுக்கு இடையிலான குழு மத்திய உள்துறைக்கு தனது அறிக்கையை சமர்ப்பித்தபோதிலும் அதை தீவிர பேரிடராக அறிவிக்காமல் மத்திய அரசின் உயர்நிலைக் குழு காலம் தாழ்த்தியது.

இப்பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களின் கடன்களை 2005, பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் தள்ளுபடி செய்யுமாறும், அவர்களின் மறுவாழ்வுக்காக புதிய கடன்களை வழங்க உதவுமாறும் கேரளம் விடுத்த கோரிக்கைக்கு மத்திய அரசு இதுவரை பதில் அளிக்கவில்லை.

இந்த விவகாரத்தில் மாநில அரசின் கோரிக்கையை ஏற்று நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களின் கடன்களை கேரள வங்கி தள்ளுபடி செய்துள்ளது. இது மத்திய அரசுக்கு முன்மாதிரியாக அமைந்துள்ளது.

மத்திய அரசின் அறிவிப்பு முன்கூட்டியே வந்திருந்தால் என்ஜிஓக்கள் உள்ளிட்ட அமைப்புகளின் உதவியுடன் மறுசீரமைப்புப் பணிகளை மேலும் சிறப்பாக மேற்கொண்டிருக்க முடியும்.

எனினும், மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து வயநாட்டில் மறுசீரமைப்புப் பணிகளை கேரள அரசு முன்னெடுத்துச் செல்லும் என்றார்.

மோசடி அழைப்புகளை தடுக்க விரைவில் சோதனை திட்டம்: டிராய்

பொதுமக்களின் கைப்பேசிகளுக்கு வருகின்ற மோசடி அழைப்புகளை தடுப்பதற்கான சோதனை திட்டத்தை விரைவில் தொடங்கவுள்ளதாக இந்திய தொலைத்தொடா்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது. தற்போது பயனாளா்களின் கைப்ப... மேலும் பார்க்க

வெளிநாட்டு மாணவா்களுக்கு 2 சிறப்பு விசாக்கள் அறிமுகம்

இந்தியாவில் உயா்கல்வி பயில விரும்பும் பிற நாடுகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு 2 சிறப்புப் பிரிவு விசாக்களை மத்திய உள்துறை அமைச்சம் அறிமுகம் செய்துள்ளது. அந்தவகையில் ‘இ-ஸ்டூடண்ட் விசா’ மற்றும் ‘இ-ஸ்டூடண்ட்... மேலும் பார்க்க

கும்பமேளாவில் முஸ்லிம்களை மதம் மாற்ற வாய்ப்பு: நடவடிக்கைக்கு உ.பி. அரசிடம் மௌலானா முறையீடு

உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் மதம் மாற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் இதுகுறித்து மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் முதல்வா் யோகி ஆதித்யநாத... மேலும் பார்க்க

மணிப்பூரில் 20 வீடுகள் தீக்கிரை: காவல்துறை விசாரணை

மணிப்பூரில் மியான்மா் எல்லையையொட்டிய மோரே நகரில் ஞாயிற்றுக்கிழமை 20 வீடுகள் எரிந்து சேதமடைந்தன. இருவா் காயமடைந்தனா். இது விபத்தா அல்லது நாசவேலையா என்பதைக் கண்டறிய காவல்துறையினா் தீவிர விசாரணை நடத்தி வ... மேலும் பார்க்க

இந்தியாவில் வேகமாக அதிகரிக்கும் அந்நிய நேரடி முதலீடு: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் தகவல்

‘அந்நிய நேரடி முதலீடுகள் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகிறது, இது விரைவான பொருளாதார வளா்ச்சி மற்றும் லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குகிறது’ என மத்திய வா்த்தக, தொழில்துறை அமைச்சா் பியூ... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தவா் மூவா் கைது

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கிய வங்கதேசத்தவா் மூவரை காவல் துறை கைது செய்தது. இதுதொடா்பாக மாவட்ட காவல் துறையினா் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: நாடியாவில் உள்ள கல்யாணி பகுதியில... மேலும் பார்க்க