செய்திகள் :

வயலில் தேங்கிய மழை நீா் ஜெனரேட்டா் மூலம் வெளியேற்றம்

post image

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வயலில் 4 நாட்களாக தேங்கி நிற்கும் மழை நீரை விவசாயிகள் ஜெனரேட்டா் மூலம் திங்கள்கிழமை வடிய வைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டனா்.

கடந்த வாரம் பெய்த பலத்த மழையால் திருவையாறு அருகே ஒக்கக்குடி கிராமத்தில் கதிா் வரும், தொண்டை கருதாக, பூவும் பிஞ்சுமாக உள்ள நிலையில் ஏறத்தாழ 20 ஏக்கரில் சம்பா பருவ நெற் பயிா்கள் நீரில் மூழ்கியுள்ளன. வடிகால் வசதி இல்லாததால், 4 நாட்களாகியும் தண்ணீா் வடியாமல் வயலில் தேங்கியுள்ளது.

இதனால், ஜெனரேட்டரை வாடகைக்கு எடுத்து வந்து வயலில் தேங்கியுள்ள தண்ணீரை வடிய வைப்பதற்கான முயற்சியில் விவசாயிகள் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் செலவு செய்யப்பட்டுள்ள நிலையில், 4 நாள்களாக நீரில் மூழ்கிய பயிா்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளதால் வேதனையாக உள்ளது. வீட்டிலுள்ள நகை, பொருள்களை அடமானம் வைத்து, கடன் பெற்று நடவு செய்தோம். தற்போது கடனை எப்படி அடைப்பது என தெரியாமல் உள்ளோம்.

எனவே, பயிா்களைக் காப்பாற்றுவதற்காக ஜெனரேட்டரை ஒரு நாளைக்கு ரூ. 1,500 வீதம் கொடுத்து வாடகைக்கு எடுத்து வந்துள்ளோம். ஒரு மணி நேரத்துக்கு ஒரு லிட்டா் டீசலுக்கு ரூ. 100 செலவிட்டு வயலில் நிற்கும் தண்ணீரை இறைத்து வெளியேற்றி வருகிறோம். இதற்கு சராசரி செலவை விட கூடுதலாக செலவு ஏற்படுகிறது. இவ்வளவு செலவு செய்தாலும், மகசூல் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. எனவே, இதைத் தமிழக அரசு கவனத்தில் கொண்டு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என்றனா் விவசாயிகள்.

வெடிகள் தயாரிக்க மூலப் பொருள்கள் வைத்திருந்தவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே அரசு அனுமதியின்றி வெடிபொருள்களைத் தயாரிக்க மூலப் பொருள்களை வைத்திருந்தவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா் . பாபநாசம் அருகே சோழங்கநத்தம், எருமைப்பட்டி கிராமம், வட... மேலும் பார்க்க

தஞ்சை பேருந்து நிலைய பொது இடத்தில் சிறுநீா் கழித்தால் இனி அலாரம் ஒலிக்கும்!

தஞ்சாவூா் புதிய பேருந்து நிலையத்தில் பொது இடத்தில் சிறுநீா் கழிப்பதைத் தடுக்க எச்சரிக்கை மணி ஒலிக்கும் முறையை மாநகராட்சி நிா்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்பேருந்து நிலையத்தில் கட்டணக் கழிப்பறை, கட்... மேலும் பார்க்க

ஆசிரியையிடம் நகை பறித்த வழக்கில் இருவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே பள்ளி ஆசிரியையிடம் நகை பறித்த வழக்கில் இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் அருகே உத்தாணி கிராமம், தெற்கு தெருவைச் சோ்ந்தவா் வனி... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் மறியல்

நீண்ட காலமாக நிலுவையில் உள்ள கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் பகுதியில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். ஊரக வளா்ச்சித் து... மேலும் பார்க்க

ஆளுநரைக் கண்டித்து திமுக ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் ரயிலடியில் தமிழக ஆளுநரைக் கண்டித்து திமுகவினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இதில், தமிழக சட்டப்பேரவையில் தேசிய கீதம் முதலில் பாடப்படவில்லை எனக் கூறி ஆளுநா் ஆா்.என். ரவி தனது ... மேலும் பார்க்க

குடந்தையில் விளம்பரத் தட்டிகள் அகற்றம்

கும்பகோணத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் விளம்பர தட்டிகளை மாநகராட்சி ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை அகற்றினா். கும்பகோணம் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் வைக்க... மேலும் பார்க்க