வரலாற்றுச் சிறப்புமிக்க சிரசுத் திருவிழா... மே 15 வேலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் திருக்கோயிலின் `சிரசு’ திருவிழா, வரும் மே 15-ம் தேதி (வியாழக்கிழமை) வெகு விமர்சையாக நடைபெறவிருக்கிறது.
தமிழகத்தில் நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க கோயில் திருவிழாக்களில், இந்த சிரசுப் பெருவிழாவும் ஒன்று.
ஆண்டுதோறும் வைகாசி முதல் நாள் சிரசு திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
லட்சக்கணக்கான பக்தர்களின் வெள்ளத்தில், முக்கிய வீதிகளின் வழியாக மிதந்துவரும் அம்மனின் சிரசு கண்களுக்கு விருந்தளித்து மெய்சிலிர்க்க வைக்கும்.

ஊர்வலத்தைத் தொடர்ந்து, சண்டாளச்சி அம்மன் உடலில் சிரசு பொருத்தப்பட்டு கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெறும். அதன்பிறகு, கெங்கையம்மன் சாந்த சொரூபியாக மாறி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
அன்றைய தினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் குடியாத்தத்துக்கு இயக்கப்படும்.
இந்த நிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் திருவிழாவில் பொதுமக்களுடன் அரசு அலுவலர்கள் மற்றும் ஏனையோர் கலந்துகொள்ள வசதியாக மே 15-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து, மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.
இதற்குப் பதிலாக, ஜூன் 14-ம் தேதி (சனிக்கிழமை) அரசு அலுவலர்களுக்கு வேலை நாளாகவும், ஜூன் 15-ம் தேதி அச்சக பணியாளர்களுக்கு வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs