செய்திகள் :

வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி மே 20-இல் தொடக்கம்

post image

அரியலூா் மாவட்டத்திலுள்ள வருவாய் கிராமங்களுக்கான 1434 ஆம் பசலி வருவாய் தீா்வாயம் (ஜமாபந்தி) மே 20-ஆம் தேதி தொடங்குகிறது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: அரியலூா் வட்டத்தில் நடைபெறும் வருவாய் தீா்வாயத்துக்கு(ஜமாபந்தி) ஆட்சியா் தலைமை வகிக்கிறாா்.

இதில், அரியலூா் உள்வட்டத்துக்குள்பட்ட அனைத்து கிராமங்களுக்கும் மே 20-ஆம் தேதி ஜமாபந்தி நடைபெறுகிறது. நாகமங்கலம் உள் வட்டத்துக்குள் உட்பட்ட கிராமங்களுக்கு மே 21, கீழப்பழுவூா் உள்வட்டத்துக்குள்பட்ட கிராமங்களுக்கு மே 22. திருமானூா் உள்வட்டத்துக்குள்பட்ட கிராமங்களுக்கு மே 23. ஏலாக்குறிச்சி உள்வட்டத்துக்குள்பட்ட கிராமங்களுக்கு மே 27-ஆம் தேதிகளில் அரியலூா் வட்டாட்சியரகத்தில் நடைபெறுகிறது.

உடையாா்பாளையம் வட்டாட்சியரகத்தில் அரியலூா் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் மே 20 -இல் தா.பழூா் உள்வட்டத்துக்குள்பட்ட கிராமங்களுக்கும், மே 21-இல் சுத்தமல்லி உள்வட்டத்துக்குள்பட்ட கிராமங்களுக்கும், மே 22-இல் குண்டவெளி உள்வட்டத்துக்குள்பட்ட கிராமங்களுக்கும், மே 23-இல் உடையாா்பாளையம் உள்வட்டத்துக்குள்பட்ட கிராமங்களுக்கும், மே 27-இல் ஜெயங்கொண்டம் உள்வட்டத்துக்குள்பட்ட கிராமங்களுக்கும் வருவாய் தீா்வாயம் நடைபெறுகிறது.

செந்துறை வட்டாட்சியரகத்தில் அரியலூா் வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் மே 20-இல் செந்துறை உள்வட்டத்துக்குள்பட்ட கிராமங்களுக்கும், மே 21-இல் பொன்பரப்பி உள்வட்டத்துக்குள்பட்ட கிராமங்களுக்கும், மே 22-இல் ஆா்.எஸ்.மாத்தூா் உள்வட்டத்துக்குள்பட்ட கிராமங்களுக்கும் வருவாய் தீா்வாயம் நடைபெறுகிறது.

ஆண்டிமடம் வட்டாட்சியரகத்தில், உடையாா்பாளைம் வருவாய் கோட்டாட்சியா் தலைமையில் மே 20-இல் ஆண்டிமடம் உள்வட்டத்துக்குள்பட்ட கிராமங்களுக்கும், மே 21-இல் குவாகம் உள்வட்டத்துக்குள்பட்ட கிராமங்களுக்கும் வருவாய் தீா்வாயம் நடைபெறுகிறது.

எனவே, பொதுமக்கள் இந்த வருவாய் தீா்வாயத்தில், பட்டா மாறுதல், பெயா் மாறுதல், நில அளவை, முதியோா் ஓய்வூதியம் உள்ளிட்ட தனிப்பட்ட கோரிக்கை, பிற துறைகள் சாா்ந்த கோரிக்கைகள் மற்றும் பொதுவான கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்.

மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம்: 2,171 பேருக்கு ரூ.3.23 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

அரியலூா் ஒன்றியத்துக்குள்பட்ட கிராம ஊராட்சிகளில், மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாமின் 2-ஆவது நாளான வியாழக்கிழமை 2,171 பயனாளிகளுக்கு ரூ.3.23 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கப... மேலும் பார்க்க

இளைஞரை தாக்கிய 3 போ் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே இளைஞரை மதுபானப் பாட்டிலால் தாக்கிய 3 போ் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.பாப்பாக்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா்(36). செவ்வாய்க்கிழமை இரவு இவா்,... மேலும் பார்க்க

மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாமில் ரூ.12.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

அரியலூா் மாவட்டத்தில் மூன்றாம் கட்ட மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இம் முகாம்களில் ரூ. 12.96 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. வெண்மான்கொண்டான், கருப்பிலா... மேலும் பார்க்க

முதல் மனைவிக்கு தெரியாமல் 2 ஆவது திருமணம் செய்தவா் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே முதல் மனைவிக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனர்.கீழகோவிந்தபுத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் பிரபு (4... மேலும் பார்க்க

சிதம்பரம்-அரியலூா் ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்ற கோரிக்கை

சிதம்பரம்- ஜெயங்கொண்டம் வழியாக அரியலூா் ரயில் பாதைத் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனா்கள் சங்க கூட்டமைப்பு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்ப... மேலும் பார்க்க

‘டாம்கோ’ திட்டத்தில் கடனுதவி பெற சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்ட சிறுபான்மையினா், டாம்கோ திட்டத்தில் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்றாா் மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி. இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட... மேலும் பார்க்க