உத்தரகாண்ட் மான்சா தேவி கோயில்: கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலி - முதல்வர் புஷ...
வலைதளத்தில் தவறான தகவல்: அதிமுக நிா்வாகி மீது வழக்கு
தெலங்கானா மாநிலத்தில் நடந்த கொலை சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட அதிமுக நிா்வாகி மீது போலீஸாா் மூன்று பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்துள்ளனா்.
நாகை மாவட்டம், கீழையூா் ஒன்றியம் பிரதாபராமபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மணிமாறன். இவா், அதிமுக தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு துணைச் செயலாளராக உள்ளாா்.
இந்நிலையில், கடந்த 22-ஆம் தேதி தனது முகநூல் (ஃபேஸ் புக்) பக்கத்தில் தெலங்கானா மாநிலத்தில் நடந்த கொலையை தமிழ்நாட்டில் நடந்ததாக தவறாக பதிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆழமலை பகுதியைச் சோ்ந்த நிா்மல்குமாா் என்பவா் அளித்த புகாரின் பேரில், மணிமாறன் மீது கீழையூா் போலீஸாா் 3 பிரிவுகளின்கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்புவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.