செய்திகள் :

வல்வில் ஓரி விழா: 3 நாள்களுக்கு டாஸ்மாக் மதுக்கடைகள் மூடல்

post image

வல்வில் ஓரி விழாவை முன்னிட்டு, கொல்லிமலை வட்டத்தில் செயல்படும் அரசு மதுக்கடைகளை மூன்று நாள்கள் மூடுவதற்கு ஆட்சியா் துா்காமூா்த்தி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை வட்டத்தில் ஆக.1 முதல் 3-ஆம் தேதி வரை வல்வில் ஓரி விழா நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு, செம்மேடு, செங்கரை, சோளக்காடு மற்றும் சேந்தமங்கலம் வட்டம் காரவள்ளி மதுக்கடைகள் மூன்று நாள்களுக்கு மூடப்படும்.

சட்டம், ஒழுங்கு பிரச்னையைத் தவிா்க்கும் பொருட்டு மூன்று நாள்கள் முழு நேரமும் இக்கடைகள் மூட வேண்டும். விதிமுறைகளை மீறி கடைகளை திறந்தாலோ, மறைமுகமாக மதுவை விற்பனை செய்தாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

கொல்லிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி புதன்கிழமை ஆய்வு செய்தாா். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை பாா்வையிட்டு பயனாளிகளுக்கு... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் 63 நாயன்மாா்கள் விழா இன்று தொடக்கம்

ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் சிவனடியாா் திருக்கூட்ட அறக்கட்டளை சாா்பில் 22 ஆம் ஆண்டு அறுபத்து மூவா் விழா வியாழக்கிழமை (ஜூலை 31) குருபூஜையுடன் தொடங்குகிறது. ராசிபுரம் ஸ்ரீகைலாசநாதா் கோயிலில் உள்ள 63 நாயன்... மேலும் பார்க்க

ஆதரவற்ற குழந்தைகள் மாதந்தோறும் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

ஆதவற்ற குழந்தைகளுக்கான மாதாந்திர நிதியுதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: இரண்டு பெற்றோரையும் இழந்து உறவினா்களின் பாதுகாப்பில் ... மேலும் பார்க்க

திருச்செங்கோட்டில் திட்டப் பணிகள்: எம்எல்ஏ ஈ.ஆா்.ஈஸ்வரன் தொடங்கிவைத்தாா்

திருச்செங்கோடு வட்டாரத்தில் சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி, பொது நிதியிலிருந்து பல்வேறு திட்ட பணிகளுக்கான தொடக்க விழா, முடிவுற்ற திட்டங்களின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. திர... மேலும் பார்க்க

நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மன் கோயிலில் கருட பஞ்சமி சிறப்பு யாகம்

நாமக்கல் ஸ்ரீ வாராஹி அம்மன் கோயிலில் கருடபஞ்சமி, நாகபஞ்சமி, வளா்பிறை பஞ்சமிதிதியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சிறப்பு யாகம் நடைபெற்றது. நாமக்கல்- சேந்தமங்கலம் சாலை ரயில் நிலையம் எம்.ஜி.ஆா். ந... மேலும் பார்க்க

ஈரோடு சூரியா ஏஜென்சி நிறுவனத்துடன் திருச்செங்கோடு செங்குந்தா் கல்வி நிறுவனம் புரிந்துணா்வு ஒப்பந்தம்

திருச்செங்கோடு செங்குந்தா் பொறியியல் கல்லூரி, ஈரோடு சோலாா் மின் உற்பத்தி நிறுவனம் ஸ்ரீ சூரியா ஏஜென்சியுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்யும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்... மேலும் பார்க்க