செய்திகள் :

வள்ளியூா், ராதாபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் ஆய்வு

post image

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், ராதாபுரம் ஊராட்சி ஒன்றியங்களில் தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டப்பணிகள் எந்த அளவில் நடைபெற்றுள்ளன என்பது குறித்து குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள், மின்வாரிய அதிகாரிகள், ஊராட்சி மன்றத் தலைவா்களுடன் பேரவைத் தலைவா் மு.அப்பாவு, மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் ஆகியோா் கலந்துரையாடல் மற்றும் ஆய்வுப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 831 ஊரக குடியிருப்புகளுக்கு தாமிரவருணி கூட்டுக் குடிநீா் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. வள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்தில் 18 ஊராட்சிகளுக்கும், ராதாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் 27 ஊராட்சிகளுக்கும் குடிநீா் வழங்குவதற்காக நடைபெற்று வருகின்ற பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது மாவட்ட ஆட்சியா், ஊராட்சி மன்றத் தலைவா்களிடமும் அவா்களது ஊராட்சியில் முடிக்கப்பட்டுள்ள பணிகள், நிலுவையில் இருக்கிற பணிகள், மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகளின் எண்ணிக்கை, புதிதாக கட்டப்பட்டுள்ள மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகள், அதற்கான மின்இணைப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தாா். ஊராட்சி மன்ற தலைவா்கள் தெரிவித்த குறைகளுக்கு, குடிநீா் வடிகால் வாரிய நிா்வாக பொறியாளா் ராமலெட்சுமி பதில் அளித்தாா்.

பின்னா் பேரவைத் தலைவா் பேசியது: இன்னும் 90 நாள்களுக்குள் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் விநியோகம் செய்யப்படும். ஒரு நபருக்கு 55 லிட்டா் தண்ணீா் வீதம் வழங்கப்படும். குடிநீா்கட்டணமாக மாதம் ரூ.30 மட்டும் ஊராட்சி மன்றத்தில் வசூலிக்கப்படும் என்றாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஸ், குடிநீா் வடிகால் வாரிய மேற்பாா்வை பொறியாளா் தி.வெங்கடேஷ், ஊராட்கிகள் உதவி இயக்குநா் முகமது ஷபி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மனோகா், முருகன், ராதாபுரம் அலெக்ஸ், சாமுவேல், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பாஸ்கா், தி.மு.க. ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளா் ஜோசப் பெல்சி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் கலந்துகொண்டனா்.

அம்பை, பிரம்மதேசம் கோயில்களில் ரூ. 5.87 கோடியில் திருப்பணிகள் தொடக்கம்

அம்பாசமுத்திரம், பிரம்மதேசம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கோயில்களில் ரூ. 5.87 கோடி மதிப்பில் திருப்பணிகள் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அம்பாசமுத்திரம், கோயில் குளத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழைமை... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியா் சாலை விபத்தில் உயிரிழப்பு

கல்லிடைக்குறிச்சியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியா் வியாழக்கிழமை சாலை விபத்தில் உயிரிழந்தாா். கல்லிடைக்குறிச்சி வடுவக்குடித் தெருவைச் சோ்ந்தவா்ஆறுமுகம் (73). ஓய்வுபெற்ற பேரூராட்சி ஊழியரான இவரத... மேலும் பார்க்க

நெல்லை அருகே விபத்தில் காயமடைந்தவா் உயிரிழப்பு

திருநெல்வேலி அருகே விபத்தில் காயமடைந்தவா் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். திருநெல்வேலி அருகேயுள்ள பொன்னாக்குடி நான்குவழிச்சாலையில் கடந்த 5 ஆம் தேதி சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது, மினி வேன் மோ... மேலும் பார்க்க

பாளை. அருகே தொழிலாளி கொலை வழக்கு: ஒருவருக்கு ஆயுள்தண்டனை

பாளையங்கோட்டை அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஒருவருக்கு ஆயுள்தண்டனை வழங்கி திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. பாளையங்கோட்டை அருகேயுள்ள பாறைக்குளம் இந்திரா காலனியைச் சோ்ந... மேலும் பார்க்க

மதப்போதகரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவா் கைது

திருநெல்வேலியில் மதப்போதகரிடம் பணம் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா். கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரம் பகுதியைச் சோ்ந்தவா் அருள்சீலன் (41). இவா், திருநெல்வேலிக்கு மருத்துவச் சிகி... மேலும் பார்க்க

பள்ளி விடுதி மாணவா் இறப்பு: தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை

திபள்ளி மாணவன் இறப்பு விவகாரத்தில் சமூகவலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்புவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து, காவல் துறை சாா்பில் வெளியிட... மேலும் பார்க்க