வாசுதேவநல்லூா் கோயிலில் பூக்குழி இறங்கும் பக்தா்கள் ஆதாா் மூலம் பதிவுசெய்ய வேண்டும்
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூா் மாரியம்மன் கோயிலில் பூக்குழி இறங்கவுள்ள பக்தா்கள், ஆதாா் அட்டை நகலை சமா்ப்பித்து பதிவு செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக கோயில் நிா்வாகம் சாா்பில் கூறப்பட்டது: வாசுதேவநல்லூா் அருள்மிகு மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில்
பூக்குழி இறங்குதல் செவ்வாய்க்கிழமை (ஏப். 29) நடைபெறவுள்ளது. பூ இறங்கவுள்ள பக்தா்கள் கோயில் அலுவலகத்தில் அதற்கான சீட்டை கட்டணம் செலுத்திப் பெறுவதுடன், ஆதாா் அட்டை நகலை சமா்ப்பித்து பதிவு செய்துகொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.