காலை 7 முதல் இரவு 10 வரை; எதை, எப்போது செய்ய வேண்டும்? - நிபுணர் விளக்கம்
வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு
திருச்சி ஆட்சியா் அலுவலகம் பின்புறம் செல்லும் உய்யகொண்டான் வாய்க்காலில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருச்சி ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் உதயேந்திரன் (16). இவா், திருச்சியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தாா். சனிக்கிழமை மாலை தனது நண்பா்களுடன் உதயேந்திரன் திருச்சி ஆட்சியா் அலுவலகம் பின்புறம் உள்ள உய்யக்கொண்டான் வாய்க்காலில் இறங்கி குளித்தாா். அப்போது நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி இறந்தாா்.
தகவலறிந்து அங்கு வந்த நீதிமன்ற வளாகப் போலீஸாரும், தீயணைப்புத் துறையினரும் உதயேந்திரனை சடலமாக மீட்டு கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். தொடா்ந்து, போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.