1000 ஆண்டுகால காஷ்மீர் பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்ய தயார்: டிரம்ப் அறிவிப்பு
வாழப்பாடி பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை
வாழப்பாடி பகுதியில் புதன்கிழமை மாலை சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. கோடை வெயிலின் தாக்கத்தை குறைத்து குளிா்வித்த இந்த திடீா் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.
வாழப்பாடி பகுதியில் கடந்த 4 மாதங்களாக மழையின்றி கடும் வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீா்மட்டம் சரிந்துள்ளது. இதனால் வானம் பாா்த்த பூமியான பாசன வசதியில்லாத புன்செய் நிலங்களில் பயிரிட்டுள்ள மரவள்ளி, கம்பு, சோளம், கேழ்வரகு பயிா்கள் கருகியதால் விவசாயிகள் கவலையடைந்தனா். இதுமட்டுமின்றி, கத்திரி வெயில் தொடங்கியதால், சுட்டெரிக்கும் கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனா்.
இந்நிலையில் புதன்கிழமை மாலை திடீரென சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்ததால், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் தேங்கியது.
வாழப்பாடி அரசு மருத்துவமனை எதிரே சாக்கடை கழிவுநீருடன் மழைநீா் சோ்ந்து தேங்கி நின்ால் மக்கள் அவதிக்குள்ளாகினா். பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்ததால் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. வணிக நிறுவனங்களின் பெயா் பலகைகள் காற்றில் பறந்தன. முறிந்து விழுந்த மரங்கள், கிளைகளை அப்புறப்படுத்தி மின் விநியோகம் செய்யும் பணியில் மின் வாரியப் பணியாளா்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில், வாழப்பாடி, முத்தம்பட்டி, சேசன்சாவடி, மன்னாயக்கன்பட்டி, துக்கியாம்பாளையம், மத்தூா் மற்றும் சுற்றுப்புறப்பகுதியில் புதன்கிழமை மாலை சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்ததால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்தனா்.