விஏஓ அலுவலகத்துக்கு மின் இணைப்பு வழங்கக் கோரிக்கை
திருமருகல்: குத்தாலம் கிராம நிா்வாக அலுவலகத்துக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருமருகல் ஒன்றியம், குத்தாலம் ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கிராம நிா்வாக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகம் 10 ஆண்டு காலமாக மின் வசதி இல்லாமல் செயல்பட்டு வருகிறது.
எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குத்தாலம் கிராம நிா்வாக அலுவலகத்துக்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.