பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை: அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை உத்த...
விடாமுயற்சி டிரைலர் எப்போது?
நடிகர் அஜித் குமாரின் விடாமுயற்சி திரைப்பட டிரைலர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
‘மங்காத்தா’ திரைப்படத்துக்குப்பின் அஜித், த்ரிஷா, அர்ஜுன் இணைந்து ‘விடாமுயற்சியில்’ நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட படமாக ‘விடாமுயற்சி’ உருவாகியிருக்கிறது.
இதையும் படிக்க: சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டேன்: சர்ச்சைக்கு இளையராஜா பதில்!
டீசர் காட்சிகளையும் ஒளிப்பதிவையும் பார்த்தால் 1997 ஆம் ஆண்டில் வெளியாகி வெற்றிபெற்ற பிரேக்டவுன் (breakdown) என்கிற ஹாலிவுட் படத்தின் தழுவல்போல் தெரிகிறது.
இந்த நிலையில், படத்தின் டிரைலரை புத்தாண்டு அன்று (ஜன. 1, 2025) வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இப்படம் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.