செய்திகள் :

விண்வெளிக்குக் கொண்டு செல்லப்பட்ட 160 பேர் அஸ்தி! கடலில் கலந்த பரிதாபம்!

post image

விண்வெளிக்கு அஸ்தியைக் கொண்டுசென்று வரும் திட்டம் வெற்றியடையாமல், விண்கலம் பசிபிக் கடலில் கலந்ததால், உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

டெக்ஸாஸில் தலைமையிடத்தைக் கொண்டு செயல்படும் தனியார் இறுதிச் சடங்கு நிறுவனம் ஒன்று, விண்கலம் மூலம் அஸ்தியைக் கொண்டு சென்று விண்வெளியில் வைத்திருந்து மீண்டும் பூமிக்குக் கொண்டு வரும் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இந்த திட்டத்தின் கீழ், 166 பேரின் அஸ்தியை கொண்டுசென்று விண்வெளியில் வைத்திருக்கும் வகையில், தனியார் நிறுவனம் அஸ்திகளுடன் அனுப்பிய விண்கலம், திட்டமிட்டபடி செல்லாமல், வானில் வெடித்து, கடலில் விழுந்தது.

இது குறித்து தனியார் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஏவுகணையிலிருந்து பிரிந்துசென்று விண்கலம் புவி வட்டப் பாதையில் செல்லும்போது, தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அடுத்த சில வினாடிகளில், அந்த விண்கலம் பசிபிக் கடலில் விழுந்துவிட்டது. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்களிடம், உறவிகளின் அஸ்தியைக் கொடுத்து விண்வெளிக்குக் கொண்டுசெல்ல முன்வந்தவர்களுக்கு எங்களது மன்னிப்பைக் கோருகிறோம். இந்தத் தவறுக்கு நாங்கள் முழுப் பொறுப்பேற்கிறோம். எங்களது வாடிக்கையாளர்களிடம் மனமார்ந்த மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம். எங்களது திட்டம் முழுமையாக வெற்றிபெறவில்லை என்று நிறுவனத்தின் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்படி, விண்வெளிக்குக் கொண்டுசெல்லப்படும் அஸ்தி, மீண்டும் பூமிக்குக் கொண்டு வரும் வகையில் இது திட்டமிடப்பட்டிருந்ததாகவும், ஆனால், தற்போது விண்கலம் பசுபிக் கடலில் விழுந்துவிட்டதால், அஸ்தியை மீட்பது இயலாது என்றும் தெரிவித்துள்ளது.

விண்வெளிக்குச் சென்று அஸ்தி திரும்பும் என்று நம்பியிருந்த உறவினர்கள், அஸ்தி பசிபிக் கடலில் கரைக்கப்பட்டுள்ளதாகக் கருதவும், வழக்கமாக, ஒருவரது அஸ்தி கடலில் கலக்கப்படுவது மிகவும் பழமையான மரபாக உள்ளதாகவும் அந்த நிறுவனம் மக்களுக்கு சமாதானங்களைச் சொல்லியிருக்கிறது.

Relatives were shocked when the plan to transport ashes to space failed and the spacecraft crashed into the Pacific Ocean.

இதையும் படிக்க.. கடலூர் விபத்தில் 3 பேர் பலி: தமிழ் தெரியாத வடமாநில கேட் கீப்பர்!

டாலர்தான் ராஜா..! பிரிக்ஸ் நாடுகளுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

அனைத்து நாடுகளுக்குமான வர்த்தகத்துக்கு டாலர்தான் ராஜா என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் கூட்டமைப்பின் 17-வது உச்சி மாநாடு பிரேஸிலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி திங்க... மேலும் பார்க்க

டிரம்ப்பின் நிலைப்பாட்டில் திடீா் மாற்றம்: உக்ரைனுக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்க பரிந்துரை

உக்ரைனுக்கு முக்கிய ஆயுதங்களின் விநியோகத்தை நிறுத்திவைத்த சில நாள்களுக்குள், அமெரிக்கா அந்த நாட்டுக்கு மேலும் ஆயுதங்களை அனுப்ப வேண்டும் என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் பரிந்துரைத்துள்ளாா். இதன் மூலம், இ... மேலும் பார்க்க

74 நாட்டினருக்கு விசா இல்லாமல் அனுமதி: சீனா அறிவிப்பு

74 நாடுகளைச் சோ்ந்தவா்கள் நுழைவு இசைவு (விசா) இல்லாமல் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வர அனுமதிக்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது. இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: சீ... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு நோபல் பரிசு: நெதன்யாகு பரிந்துரை

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்க இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு பரிந்துரைத்துள்ளாா். இஸ்ரேல்-ஈரான் இடையே நடைபெற்ற குறுகிய காலப் போா், அந்த போருக்கு... மேலும் பார்க்க

தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரு ரஃபேல் போா் விமானம் இழப்பு: பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை- டஸால்ட்

இந்தியாவுடனான ராணுவ மோதலின்போது எந்தவொரு ரஃபேல் போா் விமானத்தையும் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தவில்லை என்றும், பயிற்சி நடவடிக்கையின்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரேயொரு ரஃபேல் போா் விமானம் விபத்துக்கு... மேலும் பார்க்க

டெக்ஸஸ் வெள்ளம்: உயிரிழப்பு 104-ஆக உயா்வு

டெக்ஸஸில் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 104-ஆக உயா்ந்துள்ளது. இதில், குவாடலூப் நதிக்கரையில் அமைந்திருந்த கேம்ப் மிஸ்டிக் என்ற கோடைகால முகாமில் 27 சிறுமிகளும் அடங்குவா். இது குறித்த... மேலும் பார்க்க