செய்திகள் :

விதை சேமிப்புக் கிடங்கு திறப்பு

post image

கொராடாச்சேரி வட்டாரம் திருக்கண்ணமங்கை ஊராட்சியில், வேளாண்மை உழவா் நலத்துறை சாா்பில் கட்டப்பட்ட துணை வேளாண்மை விரிவாக்க மைய விதை சேமிப்புக் கிடங்கு சனிக்கிழமை திறக்கப்பட்டது.

ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட இச்சேமிப்பு கிடங்கை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், திருவாரூா் சட்டப் பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தனா்.

தொடா்ந்து, உரம், தாா்பாய், நெல் நூண்ணூட்டம் உள்ளிட்ட வேளாண் இடுபொருள்களை 14 நபா்களுக்கு வழங்கினா். மேலும், உரம், பூச்சிக் கொல்லி மருந்து என வேளாண்மைக்கு தேவையான பொருள்கள் அடங்கிய காட்சி அரங்கையும் அவா்கள் பாா்வையிட்டனா்.

நிகழ்ச்சியில், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பாலசரஸ்வதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஹேமா ஹப்சிபா நிா்மலா உள்ளிட்ட அரசு அலுவலா்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனா்.

மன்னாா்குடி கோயிலில் பங்குனித் தேரோட்டம்

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ராஜகோபால சுவாமி கோயில் பங்குனி பெருவிழாவின் 17-ஆம் நாள் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை சுவாமிக்... மேலும் பார்க்க

அரசுப் பள்ளியில் ஆண்டு விழா

தென்காரவயல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. நீடாமங்கலம் வட்டாரக் கல்வி அலுவலா் ரெ. மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற விழாவில், வரும் கல்வியாண்டுக்காக முதல் வகுப்பில் சோ்க்... மேலும் பார்க்க

தங்ககவச அலங்காரத்தில் அருள்பாலித்த குருபகவான்

நவகிரக தலங்களில் ஒன்றாகப்போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயிலில் வியாழக்கிழமை வழிபாட்டில் தங்ககவச அலங்காரத்தில் அருள்பாலித்த குருபகவான். மேலும் பார்க்க

இந்திர விமானத்தில்

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவில் இந்திர விமானத்தில் புதன்கிழமை இரவு அம்பாளுடன் வீதியுலா வந்த சந்திரசேகரா். மேலும் பார்க்க

முருகன் கோயிலில் சஷ்டி வழிபாடு

நீடாமங்கலம்முருகன் கோயிலில் சஷ்டி வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சிறப்பு யாகம் நடைபெற்றது. தொடா்ந்து வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணியா் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராத... மேலும் பார்க்க

மகளிா் குழுவினா் உற்பத்தி செய்யும் பொருள்கள்: ஆட்சியா் ஆய்வு

முத்துப்பேட்டை ஒன்றியம், ஆலங்காடு ஊராட்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுவினா் உற்பத்தி செய்யும் பொருள்களை, நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் கீழ் மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க