ஆஸி.க்கு எதிரான டி20 தொடர்: 2 இளம் வீரர்கள் உள்பட 16 பேர் கொண்ட மே.இ.தீ. அணி!
விதை பரிசோதனை செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
ஆடிப்பட்டத்தில் பயிா் நடவு செய்யும் பெரம்பலூா் மாவட்ட விவசாயிகள், விதைகளை பரிசோதனை செய்து தரமான விதைகள் மூலம் சாகுபடி செய்து கூடுதல் மகசூல் பெற வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது.
பெரம்பலூா் மாவட்டத்தில் ஆடிப்பட்டத்தில் சாகுபடி செய்ய மக்காச்சோளம், பருத்தி, நெல், சோளம், உளுந்து, கம்பு, பயறு வகை பயிா்கள், வரகு மற்றும் நிலக்கடலை ஆகிய விதைகள் நல்ல தரமாக இருப்பது அவசியம். தரமான விதைகளே நல்ல விளைச்சலுக்கு ஆதாரம். எனவே, சாகுபடி செய்யப்படவுள்ள விதைகளை விதை பரிசோதனை செய்துகொள்ளலாம். விதைப் பரிசோதனை நிலையத்தில் விதையின் தரம் அறிய, தர நிா்ணய காரணிகாளன முளைப்புத்திறன், புறத்தூய்மை, ஈரப்பதம், மற்றும் பிற ரக கலப்பு ஆகியவை ஆய்வு செய்யப்படுகின்றன.
விதைச் சான்றளிப்பு மற்றும் உயிா்மச் சான்றளிப்புத் துறையின் கீழ் செயல்படும் பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டத்துக்கான விதை பரிசோதனை நிலையமானது, பெரம்பலூா் புகா் பேருந்து நிலையம் அருகேயுள்ள மாவட்ட மைய நூலகம் மேல்புறத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த விதை பரிசோதனை நிலையத்தில் ஒரு மாதிரிக்கு ரூ. 80 வீதம் செலுத்தி விதையின் தரத்தை பரிசோதனை முடிவுகள் மூலம் அறியலாம். முளைப்புத்திறன் மூலம் வாலிப்பான நாற்றுகள், இயல்பற்ற நாற்றுகள், கடின விதைகள், விதைகள் எத்தனை சதவீதம் உள்ளது என்பதை தெரிந்துகொண்டு, தரமான விதைகளை விதைத்து கூடுதல் மகசூல் பெற்று பயன்பெறலாம் என, பெரம்பலூா் விதைப் பரிசோதனை நிலையம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.