செய்திகள் :

விநாயகர் சதுர்த்தி... பூஜை செய்ய நல்ல நேரம் முதல் பூஜை முறைகள் வரை!

post image

விநாயகர் சதுர்த்தி அனைவரும் கொண்டாட வேண்டிய பண்டிகை. விநாயகர் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். காரணம் அவரது தோற்றம். மற்றும் அவரது எளிமை. கோயில் வேண்டும் என்று இல்லை. அரச மரத்தடியிலும் ஆலமரத்தடியிலும் கூட எழுந்தருள்வார். அவரவர் அவரவர்க்குப் பிடித்த அலங்காரங்கள் செய்யலாம். வழிபடலாம். மஞ்சளில் பிடித்துவைத்தாலும் பிள்ளையார்தான். சாணத்தில் பிடித்தாலும் பிள்ளையார்தான். எளியவர்களுக்கும் கிடைக்கும் அருகம்புல், எருக்கம்பூ மாலை என மற்றவர்கள் புறந்தள்ளும் விஷயங்களைத் தான் ஏற்றுக்கொண்டு அருள் செய்பவர். அப்படிப்பட்ட விநாயகரைக் கொண்டாடும் நாள் விநாயகர் சதுர்த்தி.

விநாயகர்

பூஜை நேரம்

பொதுவாக பூஜை செய்ய நேரம் காலம் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. என்றாலும் மிகுந்த நற்பலன்கள் ஏற்பட நல்ல முகூர்த்தத்தைத் தேர்வு செய்து வழிபடுவது விசேஷம். அந்த வகையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி பூஜை செய்ய 27-8-25 அன்று காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் செய்யலாம். இந்த நேரம் குளிகை எனப் போற்றப்படுகிறது. குளிகையில் செய்யும் நற்காரியங்கள் மென்மேலும் பெருகும். புண்ணிய பலன்கள் பெருகும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. மாலையில் பூஜை செய்யும் வழக்கம் உடையவர்கள் 5 மணியில் இருந்து 6 மணிக்குள் பிரதோஷ காலத்தில் பூஜை செய்வது விசேஷம்.

பூஜை முறை

முதலில் ஆசமனம் செய்ய வேண்டும். அதாவது ஓர் உளுந்து மூழ்கக்கூடிய அளவுக்கு உள்ளங்கையில் தண்ணீர் விட்டு, 'ஓம்' என்று சொல்லி அந்தத் தண்ணீரை மூன்றுமுறை பருக வேண்டும். அதன்பின் பிராணாயாமம் தெரிந்தவர்கள் அதைச் செய்யலாம். தெரியாதவர்கள் கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லித் தலையில் ஐந்து முறை குட்டிக்கொள்ள வேண்டும்.

சுக்லாம் பரதரம் விஷ்ணும்

சசிவர்ணம் சதுர்புஜம்

ப்ரஸன்னவதனம் த்யாயேத்

சர்வ விக்னோப சாந்தயே

பலன் தரும் 16 நாமங்கள்

அதன்பின் மஞ்சள் பிள்ளையார் பிடித்துக் கீழ்க்கண்ட 16 மந்திரங்களைச் சொல்லி மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

ஓம் சுமுகாய நம:

ஓம் ஏகதந்தாய நம:

ஓம் கபிலாய நம:

ஓம் கஜகர்ணகாய நம:

ஓம் லம்போதராய நம:

ஓம் விகடாய நம்:

ஓம் விக்னராஜாய நம:

ஓம் விநாயகாய நம:

ஓம் தூமகேதவே நம:

ஓம் கணாத்யக்ஷாய நம:

ஓம் பாலசந்திராய நம:

ஓம் கஜாநநாய நம:

ஓம் வக்ரதுண்டாய நம:

ஓம் சூர்ப்பகர்ணாய நம:

ஓம் ஹேரம்பாய நம:

ஓம் ஸ்கந்த பூர்வஜாய நம:

பிறகு மஞ்சள் பிள்ளையாருக்கு இரு வாழைப்பழம் வெற்றிலை ஆகியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும். பின்

வக்ரதுண்ட மஹாகாய சுர்யகோடி சமப்ரபா

நிர்விக்னம் குருமேதேவா சர்வ கார்யஷு சர்வதா

என்று சொல்லி தீபாராதனை காட்டி வழிபட வேண்டும்.

இதைத் தொடர்ந்து புதிதாக நாம் வாங்கி வந்திருக்கும் மண் பிள்ளையாருக்குப் பூஜை செய்ய வேண்டும்.

மகா சங்கல்பம்

மீண்டும் ஒருமுறை ஆசமனம் செய்து, சுக்லாம்பரதம் சொல்லித் தலையில் குட்டிக் கொண்டபின் கீழ்க்காணும் சங்கல்ப மந்திரங்களைச் சொல்ல வேண்டும். இடது கரத்தில் சில பூக்கள் மற்றும் அட்சதை வைத்து வலது கரத்தால் மூடி வலது தொடையில் வைத்துக்கொண்டு சொல்ல வேண்டியது. இந்த மந்திரம் இந்த ஆண்டு 27.8.25 விநாயகர் சதுர்த்தி பூஜைக்கானது. எங்கு வசிப்பவர்களும் சொல்லும் வகையிலான எளிய சங்கல்ப மந்திரம் இது.

மம உபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர

ஆக்ஞயா பரமேச்வர ப்ரீத்யர்த்தம் அஸ்மின் க்ஷேத்ரே

விச்வாவஸு நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே

வருஷ ருதௌ பாத்ரபத மாஸே சுக்ல பக்ஷே

சதுர்த்யாம் சுபதிதௌ ஸௌம்யவாஸர சித்ரா நக்ஷத்ர

சுபயோக பத்ர கரண ஏவங்குண விசேஷண

விசிஷ்டாயாம் சதுர்த்யாம் சுபதிதௌ மம

ஸஹ குடும்பஸ்ய ஸ்ரீ ஸித்தி விநாயக

ப்ரஸாத ஸித்யர்த்தம்

யதா மதி யதா சக்தி ஸ்ரீவிக்னேச்வர பூஜாம் கரிஷ்யே!

சங்கல்பம் முடிந்தபின் கையில் வைத்திருக்கும் அட்சனை மலர்களை விநாயகருக்கு சமர்ப்பித்துப் பின் 108 அஷ்டோத்திரங்களைச் சொல்லி மலர்கள் கொண்டு விநாயகரை அர்ச்சிக்க வேண்டும்.

விநாயகர் அஷ்டோத்திரம்

ஓம் விநாயகாய நம

ஓம் விக்நராஜாய நம

ஓம் கௌரீ புத்ராய நம

ஓம் கணேச்வராய நம

ஓம் ஸ்கந்தாக்ரஜாய நம

ஓம் அவ்யயாய நம

ஓம் பூதாய நம

ஓம் தக்ஷõய நம

ஓம் அத்யக்ஷõய நம

ஓம் த்விஜப்ரியாய நம

ஓம் அக்நிகர்ப்பச்சிதே நம

ஓம் இந்த்ரச்ரீப்ரதாய நம

ஓம் வாணீப்ரதாய நம

ஓம் அவ்யயாய நம

ஓம் ஸர்வஸித்திப்ரதாய நம

ஓம் சர்வநயாய நம

ஓம் சர்வரீப்ரியாய நம

ஓம் ஸர்வாத்மகாய நம

ஓம் ஸ்ருஷ்டி கர்த்ரே நம

ஓம் தேவாய நம

ஓம் அநேகார்சிதாய நம

ஓம் சிவாய நம

ஓம் சுத்தாய நம

ஓம் புத்திப்ரியாய நம

ஓம் சாந்தாய நம

ஓம் ப்ரஹ்மசாரிணே நம

ஓம் கஜாந நாய நம

ஓம் த்வை மாத்ரேயாய நம

ஓம் முநிஸ்துத்யாய நம

ஓம் பக்தவிக்நவி நாசகாய நம

ஓம் ஏகதந்தாய நம

ஓம் சதுர் பாஹவே நம

ஓம் சதுராய நம

ஓம் சக்திஸம்யுதாய நம

ஓம் லம்போத ராய நம

ஓம் சூர்பகர்ணாய நம

ஓம் ஹரயே நம

ஓம் பிரஹ் மவிதுத்தமாய நம

ஓம் காலாய நம

ஓம் க்ரஹபதயே நம

ஓம் காமிநே நம

ஓம் ஸோமசூர்யாக்நிலோசநாய நம

ஓம் பாசாங்குச தராய நம

ஓம் சண்டாய நம

ஓம் குணாதீதாய நம

ஓம் நிரஞ்ஜநாய நம

ஓம் அகல் மஷாய நம

ஓம் ஸ்வயம்ஸித்தாய நம

ஓம் ஸித்தார்ச்சிதபதாம் புஜாய நம

ஓம் பீஜ பூர பலா ஸக்தாய நம

ஓம் வரதாய நம

ஓம் சாக்வதாய நம

ஓம் க்ருதிநே நம

ஓம் த்விஜப்ரியாய நம

ஓம் வீதபயாய நம

ஓம் கதிநே நம

ஓம் சக்ரிணே நம

ஓம் இக்ஷúசாபத்ருதே நம

ஓம் ஸ்ரீ தாய நம

ஓம் அஜாய நம

ஓம் உத்பலகராய நம

ஓம் ஸ்ரீ பதயே நம

ஓம் ஸ்துதிஹ்ஷிதாய நம

ஓம் குலாத்ரிபேத்ரே நம

ஓம் ஜடிலாய நம

ஓம் கலிகல் மஷநாசகாய நம

ஓம் சந்த்ர சூடாமணயே நம

ஓம் காந்தாய நம

ஓம் பாபஹாரிணே நம

ஓம் ஸமாஹிதாய நம

ஓம் ஆச்ரி தச்ரீகராய நம

ஓம் ஸெளம்யாய நம

ஓம் பக்தவாஞ்சி தாயகாய நம

ஓம் சாந்தாய நம

ஓம் கைவல்யஸுகதாய நம

ஓம் ஸச்சிதாநந்த விக்ரஹாய நம

ஓம் ஜ்ஞாநிநே நம

ஓம் தயாயுதாய நம

ஓம் தாந்தாய நம

ஓம் ப்ரஹ்மத்வேஷவிவர்ஜிதாய நம

ஓம் ப்ரமத்த தைத்ய பயதாய நம

ஓம் ஸ்ரீ கண்டாய நம

ஓம் விபுதேச்வராய நம

ஓம் ரமார்ச்சிதாய நம

ஓம் விதயே நம

ஓம் நாகராஜ யஜ்ஞோபவீதகாய நம

ஓம் ஸ்தூலகண்டாய நம

ஓம் ஸ்வயம் கர்த்ரே நம

ஓம் ஸாமகோஷ ப்ரியாய நம

ஓம் பரஸ்மை நம

ஓம் ஸ்த்தூல துண்டாய நம

ஓம் அக்ரண்யை நம

ஓம் தீராய நம

ஓம் வாகீசாய நம

ஓம் ஸித்திதாயகாய நம

ஓம் தூர்வாபில்வ ப்ரியாய நம

ஓம் அவ்யக்த மூர்த்தயே நம

ஓம் அத்புதமூர்த்திமதே நம

ஓம் சைலேந்த்ரநுஜோத்ஸங்க நம

ஓம் கேலநோத்ஸுகமா நஸாய நம

ஓம் ஸ்வலாவண்ய நம

ஓம் ஸுதாஸாராய நம

ஓம் ஜிதமந்மத விக்ரஹாய நம

ஓம் ஸமஸ் தஜகதா தாராய நம

ஓம் மாயிநே நம

ஓம் மூஷிகவாஹ நாய நம

ஓம் ஸ்ருஷ்டாய நம

ஓம் துஷ்டாய நம

ஓம் பிரஸந் நாத்மநே நம

ஓம் ஸர்வஸித்திப்ரதாயகாய நம

நாநாவித பரிமள பத்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி

இதற்குப் பின் பிள்ளையாருக்குப் பிடித்த நிவேதனங்களை சமர்ப்பித்துக் கற்பூர ஆரத்தி காட்டிப் பின் குடும்பத்தினர் அனைவரும் விழுந்து வணங்க வேண்டும். இந்த நாளின் மாலையில் அருகில் இருக்கும் விநாயகர் ஆலயம் சென்று வழிபடுவதும் சிறப்பு.

மறுநாள் 28.8.25 அன்று காலை மீண்டும் விநாயகருக்கு கற்பூரம் காட்டி, ஏதேனும் ஒரு நிவேதனம் சமர்ப்பித்துப் பின் அவரை மனதார வணங்கி அதன்பின் அருகில் இருக்கும் நீர் நிலைகளுக்கு எடுத்துச் சென்று கரைக்கலாம்.

விநாயகர் சதுர்த்தியை பக்தியுடன் கடைப்பிடித்தால் வாழ்வில் கஷ்டங்கள் விலகி நன்மைகள் பெருகும். அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்

Vinayagar Chaturthi | சொர்ண, அமிர்தகலச, ஹேரம்ப கணபதி... எந்த விநாயகர்-என்ன பலன்? விநாயகர் சதுர்த்தி

தமிழ் மாதமான ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி நாளை நாம் விநாயகர் சதுர்த்தி என்று சிறப்பாகக் கொண்டாடுகிறோம். புராணங்களின்படி, அன்றைய தினமே விநாயகப் பெருமான் அவதாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. அனைவராலும் நேசி... மேலும் பார்க்க

ஆண்டிபட்டி: ஸ்ரீ கோகுல கிருஷ்ணர் கோயிலில் ஆனந்தமாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம்

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வைகை அணை அருகில் குரும்பப்பட்டி என்னும் குக்கிராமத்தில் ஸ்ரீ கோகுலகிருஷ்ணர் கோயில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கோகுலாஷ்டமியை முன்னிட்டு ஸ்ரீகிருஷ்ணரைக் கொண்டாடும் விதமாக ஹ... மேலும் பார்க்க

18-ம் படி கருப்பணசாமி: `பணத்தை தர்றியா கருப்புகிட்ட வர்றியா?' - கதவு திறக்கும் வைபவம்

"உங்கிட்ட நான் கை நீட்டிக் காசு வாங்கல. வாங்கினேன்னு நீ சொன்னா அதுக்கு சாட்சி இருந்தாக் கூட்டிக்கிட்டு வா... எங்க வேண்ணா போ... எந்தக் கோர்ட்ல வேணும்னாலும் கேஸ் போடு. உன்னால ஆனதப் பாரு. என்னால் ஆனத நான... மேலும் பார்க்க

திண்டுக்கல்: குழந்தைகளை ஏலம் விடும் பெற்றோர்... தேவாலயத்தில் வினோத திருவிழா!

திண்டுக்கல் மலைக்கோட்டை பின்புறம் உள்ள முத்தழகுப்பட்டியில் 350 வருடங்கள் பழமையான புனித செபஸ்தியார் ஆலயம் உள்ளது. இங்கு ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் 4 நாள்கள் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வ... மேலும் பார்க்க

Aadi Perukku | ஆடிப்பெருக்கு தோன்றிய அற்புதக் கதை | ஆடி-18 - ஏன் நீர்நிலைகளில் வழிபாடு செய்கிறோம்?

ஆடி 18 ம் தேதி அன்று நீர் நிலைகளுக்குச் சென்று வழிபடும் வழக்கம் நம் மரபில் உள்ளது. இந்த வழிபாடு தோன்றியது எப்படி? இதற்குப் பின்னால் இருக்கும் தொன்மக் கதையினை விளக்குகிறது இந்த வீடியோ. Why Worship Wate... மேலும் பார்க்க

ஊரே கோலாகலம்... பக்தர்கள் பரவசம்... ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கல்யாண உற்சவம்!

ராமநாதசுவாமி திருக்கல்யாண உற்சவ விழாராமநாதசுவாமி திருக்கல்யாண உற்சவ விழாராமநாதசுவாமி திருக்கல்யாண உற்சவ விழாராமநாதசுவாமி திருக்கல்யாண உற்சவ விழாராமநாதசுவாமி திருக்கல்யாண உற்சவ விழாராமநாதசுவாமி திருக்க... மேலும் பார்க்க