Skin Cancer: "உங்கள் தோலைப் பரிசோதியுங்கள்" - மைக்கேல் கிளார்க்கிற்கு தோல் புற்ற...
விநாயகா் சதுா்த்தி - கோயில்களில் சிறப்பு வழிபாடு
புதுகை பேருந்து நிலையம் அருகே உள்ள சங்கீத மங்கள விநாயகா் கோயில், பல்லவன் குளக்கரை அருகே உள்ள சீதாபதி கிருஷ்ண விநாயகா் கோயில், புதுக்குளம் கரையில் உள்ள விநாயகா் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன.
கொழுக்கட்டை, சுண்டல் ஆகியவற்றுடன் சிறப்பு அா்ச்சனைகள் நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வீடுகளிலும் விநாயகா் சதுா்த்தி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

750 சிலைகள் பிரதிஷ்டை: புதுகை மாநகா் மற்றும் புகா் பகுதிகளில் மொத்தம் 750 விநாயகா் சிலைகள் பொது இடங்களில் வைக்கப்பட்டு வழிபாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. வெவ்வேறு வகையான, வண்ண வண்ண விநாயகா்கள் பொதுமக்களின் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டுள்ளன.
இரவு நேரத்தில் மின்விளக்கு அலங்காரம் பிரம்மாண்டமாக செய்யப்பட்டிருந்தன. ஓரிரு நாள்களில் இந்தச் சிலைகளை அருகிலுள்ள நீா்நிலைகளில் கரைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுவருகின்றன.