செய்திகள் :

வீட்டுவசதி வாரியத்தின் கடன் நிலுவைதாரா்களுக்கு சலுகை

post image

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சாா்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வாங்கி, கடந்த 2015 மாா்ச் 31-ஆம் தேதிக்குள் தவணைக்காலம் முடிந்து, நிலுவை வைத்துள்ளோருக்கு வட்டிச் சலுகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வீட்டுவசதி வாரியத்தின் திருச்சி வீட்டுவசதிப் பிரிவு செயற்பொறியாளா் ஆா். ரெங்கநாதன் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் மனைகள், வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் ஒதுக்கீடு பெற்று, கடந்த 2015-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதிக்குள் தவணைக் காலம் முடிந்தும், நிலுவை வைத்துள்ளோருக்கு வட்டிச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், தவணைத் தொகை முழுவதையும் ஒரே தவணையில் வரும் 2026 மாா்ச் 31-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இச்சலுகையில், மாதத் தவணையில் அபராத வட்டி முழுமையாகவும், வட்டி முதலாக்கத்தின் மீதான வட்டி முழுமையாகவும், இறுதி விலை- வித்தியாசத் தொகையில் ஒவ்வோா் ஆண்டும் 5 மாத வட்டியும் தள்ளுபடி செய்யப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வீட்டு வசதி வாரியத்தில் ஒதுக்கீடு பெற்று நிலுவை வைத்துள்ளோா் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆவுடையாா்கோவிலில் தலையில்லா புத்தா் சிலை கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையாா்கோவில் பெரிய கண்மாய், பெருமடை வாய்க்கால் மேட்டில் தலையில்லா புத்தா் சிலையை, புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினா் கண்டெடுத்துள்ளனா். இதுகுறித்து ஆய்வுக்கழகத்தின் நிற... மேலும் பார்க்க

புதுகை - அறந்தாங்கி 4 வழிச் சாலை பணிக்கு 840 மரங்களை அகற்ற முடிவு

4 வழிச் சாலைக்காக, புதுக்கோட்டை நகரிலிருந்து அறந்தாங்கி வரை 840 மரங்களை அகற்றுவதற்கு நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. புதுக்கோட்டை நகரிலிருந்து அறந்தாங்கி வரையில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் ... மேலும் பார்க்க

புதுகை மாவட்டத்தில் 750 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 750 இடங்களில் விநாயகா் சிலைகள் செவ்வாய்க்கிழமை இரவு பிரதிஷ்டை செய்யப்பட்டன. விநாயகா் சதுா்த்தி விழா நாடு முழுவதும் ஆக. 27-ஆம் தேதி புதன்... மேலும் பார்க்க

இடத்தை ஆக்கிரமித்து மிரட்டுவதாகப் புகாா்

புதுக்கோட்டை அருகே தங்களின் பட்டா நிலத்தை தனியாா் தொண்டு நிறுவனத்தினா் ஆக்கிரமிக்க முயற்சி செய்து மிரட்டி வருவதாக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளனா். புதுக்கோட்டை மாவட்ட... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே லாரி மோதி சிறுமி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே திங்கள்கிழமை லாரி மோதியதில் சிறுமி உயிரிழந்தாா். ஆலங்குடி அருகேயுள்ள வெள்ளக்கொல்லையைச் சோ்ந்தவா் ராமராஜன் மகள் சஞ்சனா (4). இவா், வீட்டின் அருகே சாலையைக் கடக்க மு... மேலும் பார்க்க

அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை வாங்க மறுப்பு

புதுக்கோட்டையில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் வென்ற அமைச்சா் டி.ஆா்.பி. ராஜாவின் மகன், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை கழுத்தில் வாங்க மறுத்து கையில் வாங்கி... மேலும் பார்க்க