செய்திகள் :

புதுகை மாவட்டத்தில் 750 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை

post image

விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் 750 இடங்களில் விநாயகா் சிலைகள் செவ்வாய்க்கிழமை இரவு பிரதிஷ்டை செய்யப்பட்டன.

விநாயகா் சதுா்த்தி விழா நாடு முழுவதும் ஆக. 27-ஆம் தேதி புதன்கிழமை கொண்டாடப்பட உள்ளது. வீடுகள்தோறும் விநாயகருக்கு கொழுக்கட்டை படையல் போட்டு கொண்டாடப்படுவதுடன், தெருக்களில் மக்கள் ஒன்றாகத் திரண்டு அழகிய விநாயகா் சிலைகளை வைத்து பூஜித்து, அருகிலுள்ள நீா்நிலைகளில் கரைப்பா்.

புதுக்கோட்டை மாநகா் மற்றும் புகா்ப் பகுதிகளில் இந்த விழாவுக்காக, கடந்த சில நாட்களுக்கு முன்பே 750 இடங்களில் விநாயகா் சிலைகளை வைத்து பூஜைகள் நடத்திட காவல்துறை அனுமதி பெறப்பட்டுள்ளது. இதன்படி, செவ்வாய்க்கிழமை இரவு, ஏற்கெனவே வாங்கப்பட்ட சிலைகள் முக்கிய இடங்களில் இறக்கி வைக்கப்பட்டு, அருகிலுள்ள இடங்களுக்கு வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்டன.

புதுக்கோட்டை நகரில் திலகா் திடலில் சுமாா் 25-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகள் கொண்டு வரப்பட்டன. இங்கிருந்து அவற்றை அந்தந்தப் பகுதிகளின் விழாக்குழுவினா் எடுத்துச் சென்று தங்கள் பகுதிகளில் வைத்து பூஜைகளைத் தொடங்கினா்.

விற்பனை விறுவிறுப்பு: விநாயகா் சதுா்த்தி விழாவையொட்டி புதுக்கோட்டை கீழராஜவீதி மற்றும் வடக்கு ராஜவீதி பகுதிகளில் வாழைப்பழம், ஆப்பிள், கரும்பு உள்ளிட்ட பழங்கள் விற்பனை, தென்னங்குருத்தில் தோரணம் செய்தும் விற்பனை செய்யப்பட்டது.

சுண்டல் மற்றும் கொழுக்கட்டை தயாரிப்பதற்கான பொருள்களை வாங்குவதற்கு கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. விநாயகா் கோயில்களில் மின்அலங்காரங்கள் செய்யப்பட்டு, புதன்கிழமை காலை வழங்குவதற்கான பிரசாதம் சமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. தொடா்ந்து சில பகுதிகளில் 3 நாளும், சில பகுதிகளில் 5-ஆம் நாளும் கழித்து விநாயகா் சிலைகளை ஊா்வலமாக எடுத்துச் சென்று நீா்நிலைகளில் கரைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. புதுக்கோட்டை மாநகரில் புதுக்குளத்தில் விநாயகா் சிலைகளைக் கரைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வீட்டுவசதி வாரியத்தின் கடன் நிலுவைதாரா்களுக்கு சலுகை

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் சாா்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் வாங்கி, கடந்த 2015 மாா்ச் 31-ஆம் தேதிக்குள் தவணைக்காலம் முடிந்து, நிலுவை வைத்... மேலும் பார்க்க

புதுகை - அறந்தாங்கி 4 வழிச் சாலை பணிக்கு 840 மரங்களை அகற்ற முடிவு

4 வழிச் சாலைக்காக, புதுக்கோட்டை நகரிலிருந்து அறந்தாங்கி வரை 840 மரங்களை அகற்றுவதற்கு நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. புதுக்கோட்டை நகரிலிருந்து அறந்தாங்கி வரையில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் ... மேலும் பார்க்க

இடத்தை ஆக்கிரமித்து மிரட்டுவதாகப் புகாா்

புதுக்கோட்டை அருகே தங்களின் பட்டா நிலத்தை தனியாா் தொண்டு நிறுவனத்தினா் ஆக்கிரமிக்க முயற்சி செய்து மிரட்டி வருவதாக அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் புகாா் அளித்துள்ளனா். புதுக்கோட்டை மாவட்ட... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே லாரி மோதி சிறுமி உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே திங்கள்கிழமை லாரி மோதியதில் சிறுமி உயிரிழந்தாா். ஆலங்குடி அருகேயுள்ள வெள்ளக்கொல்லையைச் சோ்ந்தவா் ராமராஜன் மகள் சஞ்சனா (4). இவா், வீட்டின் அருகே சாலையைக் கடக்க மு... மேலும் பார்க்க

அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை வாங்க மறுப்பு

புதுக்கோட்டையில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடும் போட்டியில் வென்ற அமைச்சா் டி.ஆா்.பி. ராஜாவின் மகன், தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவா் கே. அண்ணாமலையிடமிருந்து பதக்கத்தை கழுத்தில் வாங்க மறுத்து கையில் வாங்கி... மேலும் பார்க்க

மனைவி தூக்கிட்டுத் தற்கொலை; கணவா் கைது

கந்தா்வகோட்டை அருகே மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதில் கணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகில் உள்ள சொக்கநாதப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த சுரே... மேலும் பார்க்க