அதிமுகவை ஆா்எஸ்எஸ் வழிநடத்துவதில் என்ன தவறு? மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கேள...
புதுகையில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆக. 29-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்களை மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவித்துள்ளாா்.
புதுக்கோட்டை ஒன்றியம் ஆதனக்கோட்டை மீனாட்சியம்மன்கோயில் சமுதாயக் கூடம், அரிமளம் ஒன்றியம் மிரட்டுநிலை சமுதாயக் கூடம், பொன்னமராவதி ஒன்றியம் வாா்பட்டு ஊராட்சி சமுதாயக் கூடம், விராலிமலை ஒன்றியம் தேங்காய்த்தின்னிப்பட்டி சமுதாயக் கூடம் ஆகிய இடங்களில் இம்முகாம்கள் நடைபெறும்.
காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இம்முகாமில், அந்தந்தப் பகுதியைச் சோ்ந்த மக்கள் கலந்து கொண்டு விண்ணப்பங்களை அளித்துப் பயன்பெறலாம் என அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.