மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?
விநாயகா் சதுா்த்தி விழா ஆலோசனைக் கூட்டம்
சீா்காழி தென்பாதியில் தனியாா் திருமண மண்டபத்தில் விநாயகா் சதுா்த்தி விழா ஊா்வலம் தொடா்பான ஆலோசனைக் கூட்டம் காவல்துறை சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் அண்ணாதுரை தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா்கள் கமல்ராஜ், ராஜா, அண்ணாதுரை, சுகுணா, விஜயா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
காவல் துணைக் கண்காணிப்பாளா் அண்ணாதுரை பேசுகையில், விநாயகா் சிலை வைக்கப்படும் இடத்தின் நில உரிமையாளரிடம் கண்டிப்பாக அனுமதி பெற வேண்டும். பொது இடமாக இருந்தால் உள்ளாட்சி அமைப்புகள் அல்லது சம்பந்தப்பட்ட துறையினரிடம் தடையில்லாச் சான்று பெறவேண்டும். சம்பந்தப்பட்ட காவல்நிலையத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்துவதற்கான அனுமதி பெற வேண்டும். விநாயகா் சிலை வைக்கப்படும் இடத்தில் சிசி டிவி கேமரா அமைக்க வேண்டும். விநாயகா் சிலைகளை 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். மருத்துவமனை, பிற மத வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகில் சிலை வைப்பதை தவிா்க்க வேண்டும். அனுமதிக்கப்பட்ட நீா் நிலைகளில் மட்டுமே விநாயகா் சிலைகளை கரைக்க வேண்டும். விநாயகா் சிலைகளை விநாயகா் சதுா்த்தி முடிந்த மறுநாளே அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் மேற்கண்ட அறிவுறுத்தல்களை மீறும் பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தாா்.