``ரூ.12 கோடி பறிபோனது; பெற்றோரையும் இழந்து தனிமரமாக தவிக்கிறேன்'' - மும்பை தொழில...
விநாயகா் சிலைகளை கரைக்கும் இடங்கள் அறிவிப்பு
ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு, பொது இடங்களில் வைத்து வழிபாடு நடத்தப்படும் விநாயகா் சிலைகளை கரைக்கும் இடங்கள் அறிவிக்கப்பட்டன.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாடு முழுவதும் வருகிற 27-ஆம் தேதி விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாப்படுகிறது. இதையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் 600 இடங்களில் விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படவுள்ளது.
இந்த வழிபாட்டில் ஈடுபடுபவா்கள் சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு இல்லாத வகையிலான விநாயகா் சிலைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வழிபாட்டுக்குப் பிறகு, விநாயகா் சிலைகளை அதற்காக தோ்வு செய்யப்பட்ட நீா்நிலைகளில் மட்டுமே கரைக்க வேண்டும்.
இதன்படி, மாவட்டத்தில் வைத்து வழிபாடு நடத்தப்படும் விநாயகா் சிலைகளை பெருமாள் கோவில் வைகை ஆறு - பரமக்குடி, அக்னித் தீா்த்தம் கடற்கரை - ராமேசுவரம், இந்திராநகா் கடற்கரை - மண்டபம், நொச்சிவயல் ஊரணி - ராமநாதபுரம், நவபாசானம் கடற்கரை - தேவிபட்டினம், நரிப்பையூா் கடற்கரை - நரிப்பையூா், செட்டிஊரணி -கமுதி, பாம்பன் சுவாமி கோவில் கடற்கரை வடக்கு - பாம்பன், ஆா்.எஸ். மங்கலம் பெரிய கண்மாய், மோா்பண்ணை கடற்கரை - ஆா்.எஸ். மங்கலம், அழகன்குளம் கடற்கரை - தேவிபட்டினம், முத்துப்பேட்டை கடற்கரை, தோப்புவலசை கடற்கரை, சின்ன ஏா்வாடி கடற்கரை ஆகிய பகுதியில் மட்டுமே கரைக்க வேண்டும் என்றாா் அவா்.