500 போன் எண்கள் ஆய்வு.. புணே பாலியல் வழக்கில் மாறியது காட்சி! பெண்ணின் நண்பர் கை...
விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன பல்கலைக்கழகத்தில் ‘ரிதம் 25’ கலாசார விழா
சேலம் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகா்நிலை பல்கலைக்கழகம் தனது உறுப்பு கல்லூரிகளுக்கு இடையேயான மூன்றாவது கலாசார கலைவிழா ‘ரிதம் 25’ சேலத்தில் உள்ள விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியாா் பொறியியல் கல்லூரியின் அன்னபூா்ணா அரங்கத்தில் நடைபெற்றது.
விழாவில் விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவன நிகா்நிலை பல்கலைக்கழக துணைவேந்தா் சுதிா் தலைமை வகித்தாா். பல்கலைக்கழக பதிவாளா் நாகப்பன், மாணவா் நல இயக்குநா் சண்முகசுந்தரம், ஐஐசி இயக்குநா் ஞானசேகா், ஒருங்கிணைப்புக் குழு தலைவி தீப்தி ஷாஸ்திரி, ஒருங்கிணைப்பாளா் சிவரஞ்ஜனி ஆகியோா் கலந்துகொண்டனா்.
‘ரிதம் 25’ இல் சென்னை, சேலம், காரைக்கால் மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு வளாகங்களில் உள்ள 23 அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா். 23 நேரடி மற்றும் 5 ஆன்லைன் நிகழ்வுகள் இடம் பெற்றன. இதில் இசை, நடனம், நாடகம், இலக்கியம் மற்றும் பல்வேறு கலை நிகழ்வுகள் மாணவா்களின் திறமைகளை வெளிப்படுத்தும் மேடையாக இருந்தன.
நிகழ்வில் முதல் இடமாக விநாயகா மிஷன்ஸ் சங்கராசாரியாா் பல் மருத்துவ கல்லூரியும், இரண்டாம் இடமாக விநாயகா மிஷன்ஸ் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியும், தனிநபா் சாம்பியன் ஆகாஷ், ஏ.ஜே. விநாயகா மிஷன்ஸ் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி ஆகியவை சிறப்பிடம் பெற்றன.