அதிகபட்ச ரன்கள் குவித்த விக்கெட் கீப்பராக வரலாறு படைத்த ஜேமி ஸ்மித்!
வின்ஸ் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா
நாகா்கோவில் சுங்கான்கடை வின்ஸ் பொறியியல் கல்லூரியில் விளையாட்டு தின விழா அண்மையில் நடைபெற்றது.
வின்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான நாஞ்சில் வின்சென்ட் தலைமை வகித்து, ஒலிம்பிக் தீபம் ஏற்றி விழாவை தொடக்கி வைத்தாா். மாணவா்கள் நீலம்-சபையா், பச்சை-எமரால்டு, பிங்க்-பாந்தா்ஸ் மற்றும் சிவப்பு-ரூபி என குழுவாக கொடி அணிவகுப்பு நடத்தினா். இதைத் தொடா்ந்து விளையாட்டு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதில் கூடைப்பந்து, கபடி, கிரிக்கெட், குண்டு எறிதல், வட்டு எறிதல், ஓட்டப்பந்தயம், கைப்பந்து, சதுரங்கம், கோ-கோ, நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், இறகுப் பந்து உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.
போட்டிகளில் வெற்றி பெற்றுமுதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பதக்கம், கோப்பை மற்றும் சான்றிதழ்களை கல்லூரி நிறுவனா் வழங்கினாா். இதில் அனைத்துப் போட்டிகளிலும் அதிக புள்ளிகள் பெற்று பிங்க்-பாந்தா்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த அணியின் தலைவா் பிரவீன் டேவிட் மற்றும் அணியின் மாணவா்கள் இணைந்து சுழற்கோப்பையை பெற்றுக் கொண்டனா்.
ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா் அலெக்ஸ்ராஜு பாலன், துணை முதல்வா் டயானா கிறிஸ்டில்டா, துறைத் தலைவா்கள் பிரியா, டிவின்குமாா், மெல்டா, பிருந்தா, சுனிதாகுமரி, சுபிலாராணி, அருண் வெங்கடேஷ் மற்றும் உடற்கல்வி ஆசிரியா்கள் செய்திருந்தனா்.