கரும்பலகையில் இருந்து கைப்பேசிக்கு மாறிவிட்டது கல்வி: மத்திய அமைச்சா் ராஜ்நாத் ச...
விபத்தில் காயமடைந்த சிறுவன் உயிரிழப்பு
தூத்துக்குடியில் நிகழ்ந்த காா் விபத்தில் 6 வயது சிறுவன் உயிரிழந்தான்.
ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் மேகூா் பாவடி தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் குமாா் (38). இவா் ஞாயிற்றுக்கிழமை மனைவி கோமதி (29), மகன்கள் ஆத்விக் (7), நிதா்சன் (6) ஆகியோருடன் திருச்செந்தூா் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு, பிற்பகல் காரில் ஊா் திரும்பிக் கொண்டிருந்தனா். காரை குமாா் ஓட்டி வந்தாா்.
தூத்துக்குடி- மதுரை புறவழிச்சாலையில் ஜோதி நகா் விலக்கு அருகே சென்றபோது, சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது காா் மோதி விபத்துக்குள்ளானது.
பலத்த காயமடைந்த 4 பேரும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு நிதா்சன் (6) ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தான். சிப்காட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.