செய்திகள் :

விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கியவா் துணை விமானி!

post image

விபத்துக்குள்ளான அகமதாபாத்-லண்டன் ஏா் இந்தியா விமானத்தை துணை விமானி க்ளைவ் குந்தா் இயக்கியிருப்பது விமான விபத்து புலனாய்வு அமைப்பின் (ஏஏஐபி) முதல்கட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது.

மேலும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விமானிகளின் விவரங்கள் பின்வருமாறு:

கேப்டன் சுமீத் சபா்வால்: 56 வயதான இவா், ஏா் இந்தியாவில் 30 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த மூத்த விமானி. மொத்தம் 15,638 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் இவருக்கு உண்டு. இதில் போயிங் 787 விமானத்தை இயக்கியது மட்டுமே 8,596 மணிநேரம் அடங்கும்.

ஏா் இந்தியா நிறுவனத்தில் விமானிகளுக்குப் பயிற்சி அளிக்கும் பயிற்றுவிப்பாளராகவும் சுமீத் சபா்வால் பணியாற்றினாா். அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்படுவதற்கு முன் தனது குடும்பத்தினரிடம் தொலைபேசியில் பேசிய அவா், லண்டனில் தரையிறங்கியதும் மீண்டும் பேசுவதாகக் கூறியிருந்தாா்.

மும்பையில் உள்ள அவரது சக ஊழியா்கள் மற்றும் துணை விமானிகள், சுமீத் சபா்வாலை சிறந்த விமானியாகவும், மிகவும் பணிவானவராகவும் நினைவு கூா்ந்தனா்.

துணை விமானி க்ளைவ் குந்தா்: 32 வயதான இவா், மொத்தம் 3,403 மணிநேரம் விமானம் ஓட்டிய அனுபவம் கொண்டவா். இதில் ட்ரீம்லைனா் ரக விமானத்தை இயக்கிய 1,128 மணி நேரம் அடங்கும்.

விபத்துக்குள்ளான ‘ஏஐ 171’ போயிங் 787 ட்ரீம்லைனா் விமானத்தை இயக்கியவா் க்ளைவ் குந்தா் தான் என்பது உறுதியாகியுள்ளது. கேப்டன் சுமீத் சபா்வால் மேற்பாா்வை செய்துள்ளாா்.

விமானியாவதற்கு முன், க்ளைவ் குந்தா் ஓராண்டு விமானப் பொறியாளராகப் பணிபுரிந்தாா். மும்பையின் கோரேகானைச் சோ்ந்த இவரை, விளையாட்டின் மீது ஆா்வம் கொண்டவராகவும், குடியிருப்பு வளாகத்தில் கிரிக்கெட் விளையாடுபவராகவும் அண்டை வீட்டாா் நினைவு கூா்ந்தனா்.

மியான்மர் எல்லையில் இந்தியா ட்ரோன் தாக்குதல்?

மியான்மர் எல்லையில் உள்ள உல்ஃபா(I) முகாம்கள் மீது இந்திய ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து உல்ஃபா(I) அமைப்பு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட ஒரு செய்த... மேலும் பார்க்க

கேரள முதல்வர் இல்லத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் !

கேரள முதல்வரின் இல்லத்திற்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கேரள முதல்வர் பினராயி விஜயனின் அதிகாரப்பூர்வ இல்லமான கிளிஃப் ஹவுஸுக்கு ஞாயிற்றுக்கிழமை வெடிக... மேலும் பார்க்க

மேகாலயா தேனிலவு கொலை வழக்கு: 2 பேருக்கு ஜாமீன் !

ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் 2 பேருக்கு உள்ளூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைத்ததால், தோமர் மற்றும் பல்பீருக்கு உள்ளூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கிய... மேலும் பார்க்க

குல்காமில் 3 பேருந்துகள் மோதல்: 10 அமர்நாத் பக்தர்கள் காயம் !

குல்காமில் அமர்நாத் யாத்திரையில் 3 பேருந்துகள் மோதியதில் 10 பக்தர்கள் காயமடைந்தனர். ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பக்தர்களை ஏற்றிக்கொண்டு அமர்நாத் சென்றுகொண்டிருந்த பேருந்துகளில் 3 பேருந்துகள... மேலும் பார்க்க

கொல்கத்தா ஐஐஎம்மில் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு

கொல்கத்தாவில் ஐஐஎம்மில் பெண் மனோதத்துவ நிபுணா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க 9 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை போலீஸார் அமைத்துள்ளனர். மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தா ஐஐஎம் கல்வி ந... மேலும் பார்க்க

பாட்னாவில் கிராமப்புற சுகாதார அதிகாரி சுட்டுக்கொலை !

பாட்னாவின் பிப்ரா பகுதியில் கிராமப்புற சுகாதார அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிகார் மாநிலம், பிப்ரா பகுதியில் உள்ள ஷேக்புரா கிராமத்தில் கிராமப்புற சுகாதார அதிகாரி சுர... மேலும் பார்க்க